டில்ஷான், மேத்யூஸ் அசத்தல்

383
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை இலங்கை வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட டில்ஷான், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.

இதன் மூலம் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் ஹபீஸ் ஆகியவர்களை பின்னுக்குத் தள்ளி, டில்ஷான் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

38 வயதான டில்ஷான் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 530 ஓட்டங்களை குவித்துள்ளார். அதே போல் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் இலங்கை அணியின் அணித்தலைவர் மேத்யூஸ் தொடர்ந்து 407 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

SHARE