டிவில்லியர்ஸ் உலக சாதனையை முறியடிப்பேன் – அப்ரிடி நம்பிக்கை

429
ஒருநாள் போட்டியில் அதிவேக சதத்தை விளாசிய டிவில்லியர்ஸ் சாதனையை முறியடிப்பேன் என பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் சதமடித்து தென் ஆப்பிரிக்க வீரரான ஏ.பி டிவில்லியர்ஸ் உலக சாதனையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த சாதனை முறியடிக்க முயற்சி செய்யப் போவதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண போட்டிகளிலோ அல்லது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலோ டிவில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க முயற்சி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

முதலில் 37 பந்துகளில் இலங்கைக்கு எதிராக சதம் கண்டு அப்ரிடி ஏற்படுத்திய சாதனையை, நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் முறியடிக்க, தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார். அதனை முறியடிக்க முயற்சி செய்வேன் அப்ரிடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அப்ரிடி கருத்து வெளியிடுகையில்,

“இது போன்ற சாதனைகளை திட்டமிட முடியாது, அன்றைய தினம் நம் தினமாக அமைந்தால்தான் அது முடியும். மேலும் நமது தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

அனைத்தும் என் பொருட்டு சாதகமாக நிகழ்ந்தால் அன்றைய தினம் என்னுடைய தினமாக இருந்தால்,டிவில்லியர்ஸ் சாதனையைக் கடக்க முயற்சி செய்வேன்.

டிவில்லியர்ஸ் ஒரு உண்மையான சம்பியனாக அன்று விளையாடினார். அவருக்கு அது சிறப்பு வாய்ந்த தினமாக அமைந்தது.

நான் அன்று சாதனை நிகழ்த்தும் போது அனைத்தும் எனக்குச் சாதகமாகச் சென்றது. ஆகவே, வரும் உலகக்கிண்ணப் போட்டிகளில் எனக்கான தினம் அமையும் என்று கூறியுள்ளார்.

SHARE