இத்தாலியின் மிலானோ நகரிற்கு அருகாமையில், சினிசல்லோ பால்சோமா பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டினுள் உயிரிழந்த நிலையில் இருந்த இலங்கையரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
இத்தாலி குடியுரிமைப் பெற்றுக் கொண்ட குறித்த நபருடன், இலங்கையைச் சேர்ந்த தம்பதியினரும் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை தொடர்பில் குறித்த தம்பதியினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.