ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு அரசாங்கம் சார்பில் குழு ஜெனிவாவுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடிய பின்னர், உயர்மட்டக் குழுவை இங்கிருந்த அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்ஏ.அசீஸ் மற்றும் அவரது அதிகாரிகளையே இந்த அமர்வை கையாளுமாறு வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.