வவுனியாவில் பௌத்த மதருமாரின் முதலாவது மாநாடு

308

வட மாகாண பௌத்த மதருமாரின் முதலாவது மாநாடு, வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதியன்று இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவனுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு தலைமை சங்க நாயக்கர் சியம்பலகஸ்வெவ விமலசார தேரருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டை நடத்துவமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில், 50 பௌத்த மதகுருமார் வரை பங்கேற்கவுள்ளனர்.

வடக்கின் பௌத்த ஆலயங்களை புனரமைத்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு போன்ற விடயங்கள் இதன்போது பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE