அஜித் எப்போது சினிமாவில் நடிப்பதை தாண்டி கேமரா பக்கம் தள்ளியே இருப்பார். அவர் வெளியே செல்லும் புகைப்படங்களோ, குடும்பத்துடன் இருக்கும் படங்களோ அவ்வளவாக வெளியாகாது.
ஆனால் இப்போதெல்லாம் தான் ரசிகர்களுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் பிறந்தநாள் மார்ச் 2ம் திகதி, குழந்தையின் பிறந்தநாளை தல ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
அதேபோல் அஜித்தும் மகனின் பிறந்தநாளை சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் கொண்டாடியுள்ளாராம். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.