பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுப்பு

249
500 பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் மந்திரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவுக்கு வருகை தருவதற்கு பாகிஸ்தானைச்சேர்ந்த 500 பேருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனை பாகிஸ்தான்  மத விவகாரங்கள் துறை மந்திரி பீர் நூர் உல்  ஹக் காத்ரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேர், அஜ்மீர் தர்காவில் வழிபட வியாழக்கிழமை செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்களுக்கு இந்திய தூதரகம் விசா வழங்கவில்லை.
 இது தொடர்பாக 500 பேருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வருவதற்கு கடந்த ஓராண்டில் 5,600 சீக்கிய பக்தர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், 312 இந்து பக்தர்களுக்கும் விசா வழங்கியுள்ளோம்” என்றார்.
SHARE