கிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள் அட்டகசாம்

292

கிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள்  என்றுமில்லாதவாறு  வான் பயிர்கள் உட்பட  பயிர்களுக்கு சேதம்  விளைவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த பகுதிக்கு நுளைந்த மூன்று யானைகள் இவ்வாறு பயன்தரும் மரங்களை சேதமாக்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் இரவுவேளைகளில் வயல்வெளிகளில் நுழைந்த விடயம் தொடர்பில் அறிந்து துரத்த முற்பட்டபோது தாக்க முற்பட்டதாகவும், கிராமத்தவர்களின் உதவியுடன் யானைகளை விரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைகள் வளர்ப்பு யானைகள் போன்றே செயற்பட்டதாகவும், மக்கள் மத்தியில் பழகிய யானைகள் போலவே காணப்பட்டது என்றும் பொது மக்களால்  தெரிவிக்கப்படுகிறது.

இவை வளர்க்கப்பட்டு இங்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் மக்கள், குறித்த யானையின் கழிவுகளில் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள பொலித்தீன்கள், கித்துல் மர கழிவு ஆகியன காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இரவோடு இரவாக இங்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இவ்வாறான சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE