அனுராதபுரம் – கல்பொத்தேகம்- திமிரிகடவல பிரதேசத்திலுள்ள நீரோட்டத்தில் தலையின்றிய சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் நேற்று குறித்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சடலம் குறித்து அநுராதபுரம் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிவிட்டு நீரோடையில் வீசியிருக்கலாமென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சடலம் தலையின் காணப்பட்டதுடன் வலது கையில் முழங்கைக்கு கீழ் பகுதி இன்றியும் இடுப்பின் கீழ் பகுதிகளில் பல காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.