கள்ளக்காதலில் ஈடுபட்ட 6 ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி

238

இந்தோனேஷியாவில் கள்ளக்காதலில் ஈடுபட்ட 6 ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. கள்ளக்காதல், ஓரின சேர்க்கை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

ஏக்மாகாணத்தின் சுமத்ரா தீவு பகுதியில் சூதாட்டம், மது அருந்துதல் போன்றவற்றுக்கும் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

கடந்த ஆண்டு பண்டா ஏக் நகரில் ஹோட்டலில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்ட 12 பேர் அதாவது 6 ஜோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நேற்று பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 4 ஜோடிகளுக்கு தலா 7 தடவை சவுக்கடி கொடுக்கப்பட்டது. மற்ற 2 ஜோடிகளுக்கு தலா 17 முதல் 25 சவுக்கடி வழங்கப்பட்டது. அப்போது வேதனை தாங்க முடியாமல் பல பெண்கள் கதறி அழுதனர். 2 பேர் தூக்கி செல்லப்பட்டனர்.

சவுக்கடி தண்டனையை பலர் தொலைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். குறித்த தண்டனையை பல உரிமை குழுக்கள் எதிர்த்துள்ளன. ஆனால் ஏக் பகுதியில் வாழும் மக்கள் ஆதரிக்கின்றனர்.

SHARE