உணவு திருடியதால் ஏர் இந்திய அதிகாரிகள்

319

ஏர் இந்தியா விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில்  பயணிகளுக்கு வழங்கிய  உணவுகள்  போக, மிஞ்சிய உணவுகள் அடிக்கடி திருட்டு போனதை அடுத்து அந்நிறுவனத்தில் பணி புரியும் இருவருக்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் துணை மேலாளர் உள்ளிட்ட 2 பேர் அந்த உணவுகளை தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் 63 நாட்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.

இதேபோல் சர்வதேச விமானத்தில் மிஞ்சிய உணவுகளை 2 ஊழியர்கள் எடுத்தமை தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்ததுடன், சர்வதேச விமானத்தில் பணி செய்வதில் இருந்து தரம் இறக்கப்பட்டு உள்நாட்டு விமானங்களில் பணி செய்ய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE