மாலைத்தீவில் கடந்த வெள்ளிக்கிழமை கைதான 25 இலங்கை மீனவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் குறித்த 21 பேரும் விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணைகள் நிறைவடையும் வரை கைதுசெய்யப்பட்ட 4 படகோட்டிகளையும் மாலைதீவு அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நான்கு பேரையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மாலைதீவு தூதுவராலயம் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட 21 பேரிடமும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் விரைவில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்து விமானம் மூலம் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.