ஜெனீவாவிற்கு எனது பிரதிநிதிகள் மூவரை அனுப்ப எண்ணியுள்ளேன் – ஜனாதிபதி

639

இலங்கையின் உள்விவகாரங்களில்  தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு தனது மூன்றுபிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் பத்திரிகையாசிரியர்களுடனான சந்திப்பின்போது சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்

ஜெனீவாவிற்கு எனது பிரதிநிதிகள் மூவரை அனுப்ப எண்ணியுள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் – இலங்கை தனது விவகாரங்களை கையாள  அனுமதிக்கவேண்டும்  என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக தனது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் அமுனுகம மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை ஜெனீவாவிற்கு  அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

SHARE