இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

600

அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். .

கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி வட்டார உறுப்பினர் எஸ்.இலங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியபோது அதை அவதானித்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் பிடுங்கிய கற்றாளைகளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

SHARE