அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று நாக்பூரில் ஆரம்பமான அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 48.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந் நிலையில் இப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் களத்தடுப்பை மேற்கொள்ள மைதானத்தில் நுழைந்த வேளையில் டோனியின் ரசிகர் ஒருவர் ‘தல’ என்று ஆங்கிலாத்தில் பொறிக்கப்பட்ட டீசேட்டுடன் டோனியை நெருங்கி வர டோனி அவருக்கு பிடிகொடுக்காமல் மைதானத்தை சுற்றி ஓடினார்.
அந்த ரசிகர் விடாது டோனியை துரத்த டோனி சிறுபிள்ளைப் போன்று விளையாட்டு காட்டுகிறார். இறுதியாக டோனி அந்த ரசிகருக்கு கைகொடுத்து கட்டிப்பிடித்து மைதானத்தை விட்டு வலி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவிறது.