மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் புதன்கிழமை (06) காலை கிணறு புனரமைப்பதற்காக குழி தோண்டும் போது அந்த குழியிலிருந்து மனித எலும்புக் கூடுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சத்ருக்கொண்டான் சவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டு திட்டத்திலுள்ள ஒருவர் தனது காணியில் சிறிய கடை ஒன்றை நடத்திவரும் நிலையில் கிணறு ஒன்றை புனரமைப்பதற்காக குழி தோண்டும் நடவடிக்கையில் சம்பவதினமான இன்று மோற்கொண்டு வந்தார்.
இதன்போது குழியிலிருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புகளும் இருந்ததைக் கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு தடையவியல் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.