மன்­னார் பேசா­லையைச் சேர்ந்த இளைஞனுக்கு தண்டம்

185

கஞ்சா போதைப் பொருளை விற்­ப­னைக்­காக உடை­மை­யில் வைத்­தி­ருந்த இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பா­ண மேல் நீதி­மன்ற நீதி­பதி 40 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பண்­ணை­யில் உள்ள பஸ் தரிப்­பி­டத்­தில் 2ஆயி­ரத்து 100 கிராம் கஞ்­சாவை உடை­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச் சாட்­டில் மன்­னார் பேசா­லையைச் சேர்ந்த இளை­ஞன் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

இவ­ருக்கு எதி­ரான வழக்கு யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வந்த நிலை­யில் விசா­ர­ணைக்­காக நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது கஞ்­சாவை உடை­மை­யில் வைத்­தி­ருந்­தமை,விற்­பனை செய்ய முயற்­சித்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. இதனை சந்­தே­க­ந­பர் ஏற்­றுக்­கொண்­டார்.

இதனை அடுத்து அவ­ருக்கு இரு குற்­றங்­க­ளுக்­கும் தலா 20 ஆயி­ரம் ருபா தண்­ட­மும் செலுத்த தவ­றின் 20 மாத சிறைத்­தண்­ட­னை­யும் விதித்து யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர் தீர்ப்­ப­ளித்­தார்.

SHARE