உலக கிண்ண அணியில் இடம்பெறுவது குறித்து நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை

571

உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து சிந்திக்கவில்லை என இளம்வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்

இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிக முக்கியமான ஐம்பதாவர்  ஓவரை சிறப்பாக வீசி இந்தியாவி;ன் வெற்றியை உறுதிசெய்ததன் மூலம்  சகலதுறை வீரர் விஜய்சங்கர் கிரிக்கெட் உலகின்  கவனத்தை ஈர்த்துள்ளார்

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்க்கஸ் ஸ்டொயினி சையும் அடம்ஜம்பாவையும் ஆட்டமிழக்க செய்து விஜய்சங்கர் இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய்சங்கர் உலக கிண்ண அணியில் இடம்பெறுவது குறி;த்து நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை என முன்னரே தெரிவித்திருக்கின்றேன்  என குறிப்பிட்டுள்ளார்.

உலக கிண்ண அணியில் இடம்பெறுவதற்கு இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

43வது ஓவரை மோசமாக வீசிய பின்னர் நான்  மனதிற்குள் இறுதி ஓவரை வீசுவேன் அதனை சிறப்பாக வீசுவேன் என நினைத்துக்கொண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்

மீண்டும் பந்து வீசும்போது என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தெளிவாகயிருந்தேன் இதனால் அந்த ஓவரை சிறப்பாக வீச முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நான் பந்து வீச தயாரானவேளை பும்ரா என்னிடம் வந்து எப்படி பந்துவீசவேண்டும் என அறிவுரை வழங்கினார் எனவும் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  இந்திய அணி துடுப்பெடுத்தாடியவேளை விஜய்சங்கர் 41 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

SHARE