மொடல் ஒருவரை திருமணம் செய்யும் ஒரு பிரித்தானிய பிரபலம்

593

தன்னைவிட 27 வயது இளையவரான மொடல் ஒருவரை திருமணம் செய்யும் ஒரு பிரித்தானிய பிரபலம், தன் மனைவி தன்னை பிரிந்தபோது தனக்கு ஆறுதலாக அவர் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய கால்பந்து பிரபலமான Ian Rush (57), தன்னுடன் 25 ஆண்டுகள் வாழ்ந்த தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றபோது, தனது தனிமையில் தனக்கு ஆறுதலாக இருந்த ஐரிஷ் அழகி Carol Anthony (30)ஐ திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

Ianக்கும் Carolக்கும் தவறான உறவு இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து Ianஇன் மனைவி அவரை பிரிந்தார்.

ஆனால் தற்போது அதைக் குறித்து Carolஐக் கேட்டால், எனக்கு அவர் மீது ஆசை இருந்தது உண்மைதான், ஆனால் எங்களுக்குள் தவறான உறவு இருந்தது என்று கூறப்படுவதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை, சொல்லப்போனால், வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்.

நல்ல நண்பர்களாக ஐந்து ஆண்டுகள் பழகிய பின்னர், இன்னொரு நண்பர் சொன்னபிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே தங்களுக்கு வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள் இருவரும்.

லிவர்பூல் அணிக்காக 660 விளையாட்டுகளில் 346 கோல்களைப் போட்டவர் Ian என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பதிகளுக்குள் 27 வயது வித்தியாசம் இருந்தாலும், ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை அதைக் குறித்து Carol கொஞ்சம் வருந்தினாலும், இப்போதெல்லாம் அதைக்குறித்து கவலைப்படுவதில்லை என்கிறார்.

சொல்லப்போனால், எனக்கு வயதாவதைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஏனென்றால், Ian பார்ப்பதற்கு எப்போதுமே இளமையாகவே இருக்கிறார் என்கிறார் Carol.

SHARE