ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் விளையாட்டு விழா

580
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற விளையாட்டு விழாவில் 31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இவ்வருடம் இடம்பெற உள்ளது அந்த வகையில் பிரதேச ரீதியாக இடம்பெறும் இளைஞர் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழாக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையிலேயே ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான குழு போட்டிகளின் போட்டிகள் ஆகிய இரு தினங்களாக இடம்பெற்றன.

நேற்றைய தினம் முத்துஜயன்கட்டு பாரதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் ஆண்களுக்கான போட்டியில் மாங்குளம் ஜெயந்த் ஸ்டார் இளைஞர் கழகம் முதலாமிடத்தையும் ஒட்டுசுட்டான் ஈஸ்வரன் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியிலே முத்துஜயன்கட்டு பாரதி இளைஞர் கழகம் முதலிடத்தையும் கூழாமுறிப்பு சென்ஜோன்ஸ் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற ஆண்களுக்கான கபடி போட்டியில் கற்சிலைமடு பரந்தாமன் இளைஞர் கழகம் முதலாம் இடத்தையும் முத்துவினாயகபுரம் கலைமகள் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது பெண்களுக்கான கபடி போட்டியில் கற்சிலைமடு பரந்தாமன் இளைஞர் கழகம் முதலாம் இடத்தையும் சின்னசாளம்பன் விநாயகர் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்விளையாட்டு விழாவில் குழு விளையாட்டுக்கள் மற்றும் தனி விளையாட்டுக்கள் இடம்பெற உள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செல்லையா சுஜிதரன் தெரிவித்துள்ளார்.

SHARE