வருமானத்தை விட கடனே அதிகம்

226

இலங்கை வரலாற்றில் வருமானத்தை விட வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகமாகக் காணப்படுவது இதுவே முதல் தடவையாகும் எனத் தெரிவித்த ரஞ்சித் சியம்பலா பிட்டிய, இதன் காரணமாக நாட்டிலுள்ள பிரஜைகள் ஒவ்வொருவரும் சுமார் 16, 000 ரூபாவினை வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரிகள், விவசாயிகள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை அரசாங்கம் மறந்து விட்டது. ஒரு நாட்டில் மிகுந்த பொறுப்பு கூறலுடைய வரவு – செலவு திட்டம் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரமாகிவிட்டது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

SHARE