சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார்.
சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரன் ஒருவரைப் பற்றி எழுதியமைக்காக தமிழ்தந்தி என்ற ஊடகம் ஸ்ரீலங்கா அரசின் ஆகப் பிந்திய இலக்காகியுள்ளதுடன் பயங்கரவாதத் விசாரணைப் பிரிவின் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.
– ஐ.நாவில் கஜேந்திரகுமார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் பொது விவாதத்தில் விடயம் 08 ன் கீழ் ஆற்றிய உரை இங்கு +தரப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஒரு மக்கள் குழுமமானதுஇ ஐ.நா பட்டயத்தின் பிரகாரம்இ எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாத தம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்தினர் உரித்துடையவர்கள் என்பதை வியன்னா பிரகடனம் மற்றும் வியன்னா நிகழ்ழ்சிதிட்டம் என்பன அங்கீகரிக்கின்றன.
சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது ஒருபோதும் பாராதீனப்படுத்தபடமுடியாத தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது.
சிறீலங்கா அரசானது வன்முறையை கையிலெடுத்தபோது அதற்கான எதிர்வினையாக தமிழர் தரப்பும் ஆயுதத்தை கையில் எடுக்கநேர்ந்த்து.
ஆனால் அதேவேளைஇ தமிழ் விடுதலை அமைப்பினை மட்டுமினறிஇ தனது பார்வையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிபவர்கள் என கருதப்படும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் என அனைவரையும் சிறிலங்கா அரசானது தனது இலக்காக கருதியது.
இப்படியானவர்களுள் ஊடக அமைப்புக்கள்இ ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழிலாளர்கள் ஆகியோரே பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
போர் நடந்த காலப்பகுதியில் சிறிலங்காவில் கொல்லப்பட்ட 48 ஊடகவியலாளர்களுள் 41 பேர் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாலர்கள் ஆவார்கள். தமிழர்களல்லாத ஏனைய அந்த 7 ஊடகவியலாளர்களில் ஆகக்குறைந்தது இரு ஊடகவியலாளார்கள்இ தமிழர்கள் மீதான அரச ஒடுக்குமுறையை வெளிப்படுத்தியமைக்காக அரசினால் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
தமிழ்த்தந்தி எனப்படும் ஊடகநிறுவனம் சிறிலங்கா அரசின் ஆகப்பிந்திய இலக்காக அமைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரர் ஒருவர் பற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்தமைக்காக அவர்கள் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினால் அச்சுறுத்தப்படதோடு சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என இந்த சபைக்கு சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ள நிலையிலும் கூட பயங்கரவாதத்தடுப்புப்பிரிவின் இந்த நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கடும்நெருக்கடி, ஆபத்து என சில தமிழ் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வெளியிடும் செய்திகளை பார்க்கும் சாதாரண மக்கள் ஐ.நா.சபை இலங்கை அரசின் செவியை பிடித்து இழுத்து சென்று இருத்தி வைத்து தான் சொல்வதை எல்லாம் செய்விக்கப்போகிறது, இலங்கைக்கு தண்டனை கிடைக்கப்போகிறது என பாமர மக்கள் எண்ணக் கூடும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஒரு மாயை நிலையில் வைத்திருக்கத்தான் தமிழ் அரசியல்வாதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் விரும்புகின்றன.
இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், கால அவகாசம் கொடுக்க கூடாது என ஒரு தரப்பும் தங்களுக்குள் முரண்பட்டு அவன் துரோகி இவன் துரோகி என முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய அனைவரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து ஒரே கோரிக்கையை ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் கொடுக்க தயாராக இல்லை. அனைவரும் தங்கள் அரசியல் நலனையும் வாக்கு வங்கியையும் இலக்கு வைத்து செயற்படுகிறார்களே ஒழிய தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்படுவதாக தெரியவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் தம்மை தெரிவு செய்த மக்களின் விருப்பங்களை பிரிதிபலிப்பதாக தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தனக்கான சொந்த சலுகைகளை பெறுவதில் காட்டும் அக்கறை பாதிக்கப்பட்ட மக்கள் மீது காட்டவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கோரிக்கைகளை நிபந்தனைகளாக முன்வைத்து அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரியவில்லை. தனியே தமக்கான சலுகைகளை எதிர்பார்த்தே ஆதரவளிப்பதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
அண்மையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் இல்லையேல் வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்ற கோரிக்கை மட்டக்களப்பு அம்பாறை பிரதேச தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது. ஆதரவாக வாக்களித்ததற்கு ஆயிரம் காரணங்களை சொன்னாலும் இந்த கோரிக்கையை முன்வைத்த தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது, தங்களை கைவிட்டு விட்டது என்ற கோபம் நிட்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் எதிர்வரும் தேர்தல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
அது தவிர சிறிலங்கா அரசை காப்பாற்றும் வகையிலேயே ஐ.நா.மனித உரிமை பேரவை விடயங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக தமிழ் மக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ரெலோ உட்பட ஐந்து தமிழ் கட்சிகள் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என கூட்டாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் அதேவேளை கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசுக்கட்சியினர் உள்ளனர்.
தமிழ் கட்சிகள் அனைத்தும் வெறும் பத்திரிகை அறிக்கைகளும் மேடைப்பேச்சுக்களுமாக உள்ளனரே தவிர தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றுபடுத்தி ஒரே கருத்துடன் சர்வதேச சமூகத்தை அணுகும் போக்கு அவர்களிடம் அறவே கிடையாது.
வடமாகாணசபை இயங்கிய காலத்தில் 400க்கு மேற்பட்ட தீர்மானங்கள் அச்சபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனப் படுகொலை என்றும், போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை அவசியம் என்றும் வடமாகாண சபையில் இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தன.
அந்தத் தீர்மானங்களை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதுவரை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு அனுப்பி வைக்கவில்லை என கொழும்பில் உள்ள மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன் தனது கட்டுரை ஒன்றில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
தீர்மானங்களை நிறைவேற்றி தமிழ் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்துவிட்டால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட பெரும்பாலான அரசியல்வாதிகள் உள்ளனர்.
இந்நிலையில் தான் இலங்கையிலிருந்து ஜனாதிபதி அணி, பிரதமர் அணி என இரு அணிகளும் மகிந்த சார்பு அணிகளும், தமிழர் தரப்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் என பல கட்சிகளின் பிரதிநிதிகளும், சில அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஐரோப்பா கனடா அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழ் நாட்டிலிருந்து சிலரும் ஜெனிவாவில் முகாமிட்டிருக்கின்றனர்.
இதில் இன்னொரு நகைப்புக்கிடமான வேடிக்கை என்ன வென்றால் ஐனாதிபதியின் பிரதிநிதியாக செல்லும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் தமிழர் தரப்பை சேர்ந்த சிலரும் தமது கோரிக்கைகளை ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்குமாறு கையளித்திருக்கிறார்கள்.
போர்க்குற்ற விசாரணையை நடத்த மாட்டேன், போரில் ஈடுபட்ட படையினரை தண்டிக்க அனுமதிக்க மாட்டேன், ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கணக்கில் எடுக்க மாட்டேன் என சிங்கள பேரினவாத சிந்தனையுடன் பேசிவரும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பிரதிநிதியாக செல்லும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கையளிப்பாரா?
போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மகஐரையே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் வடக்கு ஆளுநரிடம் கையளித்திருக்கிறார்கள்.
ஐனாதிபதியின் பிரதிநிதி இந்த மகஜரை ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பார் என எண்ணுவது எவ்வளவு பெரிய நகைப்புக்கிடமான விடயம்.
இவர்களுக்கு தேவையானது மகஜரை ஆளுநர் அலுவலகத்தில் கையளித்து வீடியோ போட்டோக்களை எடுத்து ஊடகங்களுக்கு கொடுப்பது மட்டும் தான்.
இவ்வேளையில் தமிழர் தரப்பும் ஐ.நா.மனித உரிமை பேரவை ஊடாக கேட்டது கிடைத்துவிடும் என்ற மாயையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஜெனிவாவுக்கு போய் பேசி சாதித்து விட்டு வந்தோம் என தற்பெருமை பேசும் தமிழ் அரசியல்வாதிகளைத்தான் நாம் அதிகம் காண்கிறோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இருக்கும் அதிகாரம் என்ன, ஒரு நாட்டை தண்டிக்கும் அல்லது இதை செய் என உத்தரவு போடும் அதிகாரம் உண்டா? என்பதை சிலர் விளங்கிக்கொள்வதில்லை.
இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள், உறுதியான முடிவுகளை எடுங்கள் என ஐ.நா.மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் வேண்டுகோள் விடுக்க முடியுமே அன்றி எந்த ஒரு நாட்டிற்கும் உத்தரவு போடும் அதிகாரம் ஆணையாளருக்கு கிடையாது.
அங்கத்துவ நாடுகள் தான் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கின்றன. இலங்கையை பகைத்துக்கொள்ள எந்த நாடும் முன்வரப்போவதில்லை. உதாரணமாக பிரித்தானியா இலங்கையுடன் தொடர்ந்து நட்பு நாடாக செயற்பட விரும்புமே ஒழிய இலங்கை அரசை அவர்கள் பகைத்து கொள்ள தயாராக இல்லை. அதேபோலத்தான் ஏனைய ஐரோப்பிய மற்றும் கனடா அவுஸ்ரேலிய போன்ற நாடுகள் செயற்படுகின்றன.
சீனா, ரஷ்யா, இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் முழுக்க முழுக்க இலங்கைக்கை காப்பாற்றுவதற்கே கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றன.
உதாரணமாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அங்கத்துவ நாடுகள் இலங்கை மீது பொருளாதார தடையை விதியுங்கள் என வேண்டுகோள் விடுக்கலாமே ஒழிய பொருளாதார தடையை விதித்து இலங்கையை தண்டிக்கும் அதிகாரம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு கிடையாது.
ஐ.நா.மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எவையும் இலங்கை மீது பொருளாதார தடையை விதிப்பதற்கோ அல்லது இலங்கையை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவதற்கோ தயார் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
அண்மையில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் கூட ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது. இதற்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அங்கத்துவ நாடுகளைத்தான் கோரியிருந்தாரே ஒழிய ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாது நான்கு வருடங்களான ஏமாற்றிய இலங்கை அரசாங்கத்திற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்றோ இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை.
ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் வரைவை, பிரித்தானியாவும், ஜேர்மனியும் கடந்த திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன.
‘சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இந்த தீர்மான வரைவில், 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில், 30ஃ1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானத்தை தான் நடைமுறைப்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதனையும் நடைமுறைப்படுத்தாது கடந்த நான்கு ஆண்டுகளாக உதாசீனம் செய்து வரும் சிறிலங்கா அரசாங்கம் இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை இரண்டு வருடங்களில் நிறைவேற்றும் என தமிழர் தரப்பு யாராவது நம்பினால் அதனைப் போன்ற முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.