நயன்தாரா பிரகாஷ்ராஜுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.தமிழ், தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நீ எங்கே என் அன்பே (தெலுங்கில் அனாமிகா). சேகர் கம்முலா இயக்கி உள்ளார். ரிலீசுக்கு முன் இப்படத்தை விளம்பரம் படத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.
ஆனால் பட ஹீரோயின் நயன்தாரா இது தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து பட தயாரிப்பாளருக்கும், நயன்தாராவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது பற்றி தெலுங்கு பட இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு சங்கம் சார்பில் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நயன்தாராவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. இதேபோல் ‘ஆகடு‘ பட ஷூட்டிங்கின்போது உதவி இயக்குனர்களை தரக்குறைவாக திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் தரப்பட்டிருந்தது. விசாரணைக்கு பிறகு அவருக்கும் தெலுங்கு படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.