தவராசாவின் தப்பான தரவுகள் 09.04.2019

1614

 

முன்னைய வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்கள்
அண்மைய உச ;ச நீதிமன்றத ; தீர்மானத்தை முன்வைத்து வருங்காலத்தில் அரசியல்
இலாபம் பெற முயற்சிக்கின்றார். முன்னரும் அவரின் தேவையற்ற
குற்றச்சாட்டுக்களுக்குப் பதி;ல் அளித்திருக்கின்றோம ;. இப்பொழுது அவர் உச்ச
நீதிமன்றத் தீர்ப்பை முன ;வைத்து ம Pண்டும் பழைய பல்லவியைப் பாட
முயன்றுள ;ளார்.


குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு சூழல் மற்றும ; இயற்கையியல் மன்றத ;தின்
தலைவர் இரவீந்திர குணவர்த்தன காரியவாசம் என்பவரால் நொதேர்ன் பவர்
கம்பனிக்கு (8ம் எதிர்வாதி) எதிராகப் பதியப்பட்ட வழக்கு. அடிப்படை உரிமைகள்
பற்றிய விண்ணப்பம் இவ்வழக்கு. மத்திய சூழல் அதிகாரசபை (முதலாம்
எதிர்வாதி) அச்சபையின் தலைவர் (இரண்டாம் எதிர்வாதி) இலங்கை மின்சார சபை
(மூன்றாம் எதிர்வாதி) அச்சபையின் தலைவர் (நான்காம் எதிர்வாதி) வடமாகாண
முதலமைச்சர் (ஐந்தாம் எதிர்வாதி) வட மாகாண சூழல்சார் அமைச்சர் (ஆறாம்
எதிர்வாதி) தலைவர், வலிகாமம் தெற ;கு பிரதேச சபை (ஏழாம் எதிர்வாதி) மற்றும்
சட்டத்துறை தலைமையதிபதி (ஒன்பதாம ; எதிர்வாதி) இலங்கை முதலீட்டு சபை
(பத்தாம் எதிர்வாதி) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (பதினோராம ;
எதிர்வாதி) போன்றவர்கள் குறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில்
தேவைப்பட்ட கட ;சிக்காரர்கள் என்ற முறையில் எதிர்வாதிகளாகச்
சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
வடமாகாணசபையைப் பொறுத்த வரையில் குறித்த 1ம், 2ம், 3ம், 4ம், 8ம், 10ம்,
11ம் எதிர்வாதிகள் மாகாணசபை அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் இல்லை என்றும்
அவர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் பொறுப்பேற்க முடியாதென்றும் எமது உறுதி
மொழிப் பத்திரத்தில் நாம் குறிப்பிட ;டிருந்தோம். ஆனால் பாதிக்கப்பட்ட எம்
மக்களுக்கு மாகாண சபை என்ற முறையில ; பவுசர்களில் சுண்ணாகத்திலும் அதன்
சுற்றுப்புறங்களிலும ; தொடர்ந்து குடி நீர் விநியோகம ; செய்து வந்தோம் என்று
குறிப்பிட ;டிருந்தோம். இதனை உச்ச நீதிமன்றம் தமது தீர்மானத்தில்
முரண்பாட ;டுக்கு இடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரம் உண்மையைக்

2
கண்டுபிடிக்க ஒரு நிபுணத்துவர் குழுவொன்றை உருவாக்கி அதன் அறிக்கையை
நாம் பெற்றமை பற்றியும் நீதியரசர்கள் தமது தீர்மானத்தில் குறிப்பிட ;டுள ;ளார்கள்.
ஆனால் அறிக்கைகள் எதுவும் எம ;மால் சமர்ப்பிக்கப்படவில்லை. வழக்கானது
விண்ணப்பதாரருக்கும் 8ம் எதிர்வாதிக்கும் இடையிலேயே முக்கியமாக
நடைபெற்றது. எனவே அறிக்கைகளை 8ம் எதிர்வாதியே மன்றில்
சமர்ப்பித்திருந்தார். 9ம் எதிர்வாதியாகிய சட்டத்துறைத் தலைமையதிபதி 1ம், 2ம்,
3ம், 4ம் எதிர்வாதிகளுக்கும் 10ம், 11ம், எதிர்வாதிகளுக்கும ; தெரிபட்டார்.
நீர்மாசடைவு பாதிப்புக்கள் பற்றி 2008ம் ஆண்டு தொடக்கம் சுண்ணாகம் வாசிகள்
தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்கள். 2012ல் நீர் வழங்கல ; மற்றும ; வடிகால்
சபை இது பற்றித் தமது ஆவணங்களில் குறிப்பிட ;டுள ;ளனர்.
வடக்கு மாகாணசபை 2013 செப்ரெம்பர் மாதத்திலேயே அதிகாரத்திற்கு வந்தது.
அப்போது திரு.தவராசா அவர்கள் சபையில் தெரிவாகி இருக்கவில்லை.
எம ;மைப் பொறுத்த வரையில் மாசு ஏற்பட்ட நீர் எம் மக்களின் பாவனைக்கு
உகந்ததா இல்லையா என்பதே எமது கரிசனையாக இருந்தது.
மாசடைந்திருந்ததால் எது வரையிலான மாசடைந்த நீரை பாவனைக்கு மக்கள்
எடுக்கலாம் என்பதே எமது தலையாய அக்கறையாக இருந்தது.
திரு.தவராசா கூறுவது போல் நீரில ; மாசடைவுகள ; எவையும ; இருக்கவில்லை என்று
எவருமே கூறவில்லை. நாமும் கூறவில்லை. நிபுணத்தவர் குழு அங்கத்தவர்கள்
கூடக் கூறவில ;லை. அது அவரின் கற்பனையின் உச ;சக் கட்டம்!
நீதிபதிகளின் தீர்மானத்தின் படி (பக்கம் 37 பார்க்க) 2008ம் ஆண்டு தொடக்கம்
பாதிப்பு ஏற்பட ;டு 2012, 2013, 2014 வரை அப்பாதிப்பு நீடித்தது. ஆனால ; 2015ல்
அவற்றின் தாக்கம் குறைந்துகொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட ;டுள்ளார்கள்.
வடமாகாணசபையால் நிபுணத்துவர் குழு நியமித்து அவர்களின் அறிக்கை
2015ஆண்டு செப்ரெம்பரிலேயே சமர்ப்பிக்கப்பட ;டது.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தூய குடிநீர் செயலணி பாராளுமன்ற
அங்கத்தவர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் உள ;ளடக்கி
நியமிக்கப்பட்டது. பின்னர் திரு.தவராசாவும் அந்த அணியில ; சேர்க்கப்பட்டிருந்தார்.

3
அந்த செயலணிதான் நிபுணர்கள் குழுவொன்றின் அவசியத்தை
வலியுறுத்தியிருந்தது.
அப்போது குடிநீரில ; எண்ணெய், மசகு ஆகியவை இருந்தால் ஒரு ல Pட்டருக்கு ஒரு
மில்லி கிராமுக்குக் குறைவாகவே அவை இருக்க வேண்டும ; என்று ஒரு நியதி
இருந்தது. இந் நியதி 28.08.2013 வரை நடைமுறையில ; இருந்தது.
பின்னர் நியதியில ; மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஏற்கக ;கூடிய எண்ணெய், மசகு
ஆகியவற்றின் கலப்பு ல Pட்டருக்கு 0.02 கிராம் எனப்பட்டது. முன்னர் ஒரு
மில ;லிகிராம் என்றிருந்தது பின்னர் 0.02 கிராம் என மாற்றப்பட்டது. ஆகவே
பலவிதமான முரண்பாடுகள் இதன் பொருட ;டு அறிக்கைகள் இடையே காணப்பட்டன.
எனினும் நிபுணத்துவர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது நிலத்தடி
நீரின் எண்ணெய்த்தன்மை குறைந்து வந்தது என்று கூறியதை மத்திய சூழலிய
அதிகாரசபையின் 2015ம் ஆண ;டின் அறிக்கை குறிப்பிட ;டுள ;ளது என்பதை உச்ச
நீதிமன்றம் பக்கம் 32ல் பின்வருமாறு கூறியுள்ளது ‘2015ம் ஆண்டைப்
பார்த்தோமானால் மத்திய சூழலிய அதிகாரசபையால் தயாரிக்கப்பட ;ட 2சு14 என்ற
அறிக்கையின் படி 2015ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதியன்று 20 கிணற்று நீர்
மாதிரிகளைப் பெற்று பரிசோதித்ததில் முன ;னைய வருடங்களிலும் பார்க்க
எண்ணெய், மசகு உள்ளடக்கம் நிலத்தடி நீரில ; குறைந்து செல்லுந் தன்மையைக்
காணக்கூடியதாக இருந்தது.’
ஆகவே இவ்வாறான குறைந்து செல்லுந் தன்மையை 2016ம் ஆண்டில் நான்
பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்குக் கூறியதில் தவறு ஏதும் இல்லை.
அரசியல் ரீதியாக என்னை அசிங்கப்படுத்தத் துடிக்கும் நண்பர் தவராசாவிற்கு
பின்வருவனவற்றைக் கூற விரும்புகின்றேன ;.
1. நீரில ; எண்ணெய், மசகு இல்லை என்று நாம் என்றுமே கூறியதில்லை.
நிபுணர்கள் குழுவும் கூறவில ;லை. எவ்வளவு மாசு நீரில ; கலந்திருந்தது
என்பதிலேயே முரண்பாடுகள் இருந்தன.
2. நீரில ; எண்ணெய் இல்லை என்று நாங்கள் நினைத்திருந்தால்,
சொல்லியிருந்தால் அல்லது வாதிட்டிருந்தால் ஏன் நாங்கள் அவ்வளவு
பாடுபட ;டு டீழறணநச களில ; குடிநீரை மக்களுக்கு அனுப்பி வைத்தோம்?

4
3. அறிக்கை பெறுவதில் நாம் எந்தவித அதிகப்படியான செலவையும்
செய்யவில ;லை. நீரின் தன்மை பற்றியறிய அறிக்கை தேவையாக இருந்தது.
தகுந்தவரை உள்ளடக்கியே அறிக்கை தயாரிக்கப்பட்டது. எந்தவொரு
பொறுப்புள ;ள மாகாணசபையும் தமது மக்கள் பொருட ;டு செய்யவேண்டிய
ஒரு கடமையையே நாம் நிறைவேற்றினோம். வெளிநாட்டு அறிக்கைகள் பெற
நாம் செலவு ஏதும் செய்யவில ;லை.
4. பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கு நீரின் மாசு குறைவடைந்து
வருகின்றதென்பதை நான் அவரைச் சந்திக்க முன்னரே அரச அறிக்கைகள்
ஊர்ஜிதப்படுத்திவிட ;டன.
5. உச்ச நீதிமன்றம் வடக்கு மாகாணசபை பற்றியோ, எமது நிபுணர்கள் குழு
பற்றியோ எந்தவித பாதகமான விமர்சனங ;களையும் வெளியிடவில்லை.
எம்மை ஏதேனும் நட்ட ஈட்டுத் தொகையைக் கட்டுமாறு பணிக்கவில ;லை.
மொத்தத்தில் உச ;ச நீதிமன்றம் வடக்கு மாகாணசபையை எந்த ஒரு
பாதிப்பான விமர்சனத்துக்கும் உள்ளாக்கவில்லை. மாறாக எமது நிபுணர்கள்
அறிக்கையில் கூறப்பட்ட டீவுநுஓ சம ;பந்தமாகவும ; நட்ட ஈடு கட்டவேண்டும ;
என்று கட்டளை இட்டுள ;ளது. டீவுநுஓ பற்றி முன்னைய அறிக்கைகளில்
குறிப்பிடவில ;லை.
திரு.தவராசா அவர்கள் அரசியல் இலாபம் பெற அரட்டுகின்றார். அவரை
அலட்சியம் செய்வது போல ; அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருங ;கள்
என்று என் நண்பர்கள் பலர் கூறினார்கள ;. ஆனால் யார் யார் தயவிலேனும்
நண்பர் தவராசா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அந்தக்
காலகட்டத்தில் தக ;கவைத்துக்கொண்டிருந்தார் எனினும் அந்தப் பதவியை
அவர் வகித்ததால் அவரின் பழைய பதவியின் மாண்பு கருதி இந்த
விளக்கத்தை பத்திரிகைகளுக்கு விடுக ;கின்றேன்.
மேற்படி மாற்றுரையை முன்னாள் முதலமைச ;சர் அவர்கள ; விடுத்துள்ளார்கள்.
ஊடகப்பிரிவு
தமிழ் மக்கள் கூட ;டணி

SHARE