இஸ்லாமித் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின்
பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான்வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர்.[இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன.
இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட அமெரிக்கா, மியான்மர், பிலிப்பீன்சு மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது.
இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது.
சுன்னாமற்றும் ஜிகாத்
முகம்மது நபியின் செயல்கள் மற்றும் குரானின் வசனங்கள்[11] இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீதான வன்முறையை ஊக்குவிக்கின்றன.[12] ஜிகாத்தொடர்பான முதல் சட்டதிட்டங்கள் அப்த் அல்-ரஹ்மான் அல்-அவ்ஸாய் மற்றும் இப்னு அல்-ஹஸன் அல்-ஸ்யாபானி ஆகியோரால் எழுதப்பட்டன. இது தொடர்பான சர்சைகள் முகம்மது நபியின் மரணத்திலிருந்து தொடருகின்றன.
வரலாறுஏழாம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மதத்தின் எழுச்சியானது இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீது ஜிகாத் எனும் பெயரால் நடத்தப்படும் வன்முறையின் மூலமாகவே பெறப்படுகிறது. இஸ்லாமிய மதம் அடிப்படையில் அமைதி வழி மார்க்கம் அல்லது வன்முறை வழி மார்க்கம் அல்லது இரண்டும் கலந்த வழிமுறைகளைக் கொண்ட மார்க்கம் என விவாதிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில வசனங்கள் ஜிகாத்தை இஸ்லாமியர்களின் முக்கியக் கடமை என்று குறிப்பிடுகிறது. இத்தகைய வசனங்களை அடிப்படைவாதிகள் செயல்படுத்துவதன் மூலமாக தீவிரவாதத்தை நியாயப்படுத்துகின்றனர்.
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். – குரான் (09:05). முஷ்ரிக்குகள்-இணை வைப்பபவர்கள்
கருத்தியல்
இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு ஜிகாதே அடிப்படைக் காரணமாகக் கூறப்படுகிறது. ஜிகாத்தானது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அல்லது தங்களது இனத்தவரைத் தாக்கியவரைப் பழிவாங்கும் நோக்கோடு தாங்குதல் ஆகும். பெரும்பாலான ஜிகாதிக் குழுக்கள் மேற்குலக நாடுகள் அல்லது இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதலை நடத்துகின்றன. இந்தியாவில் இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்குமான வரலாற்றுக் காரணங்களாலேயே தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.[சான்று தேவை] அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையின் படி இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலகம் முழுவதையும் இஸ்லாமியச் சட்ட ஆட்சியின் கீழ் கொண்டுவர வரம்பற்ற தாக்குதல்களை நடத்தலாம் என்பதே ஜிகாத் ஆகும் என பெர்னார்ட் லீவிஸ் (Bernard Lewis) கூறுகிறார்.[13] மேலும் அவர் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியர் அல்லாத மக்கள் அடிமை வரி செலுத்த வேண்டும் என்றனர் என்கிறார்.[14]
நடவடிக்கைகள்
இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் உலகின் பல நாடுகளில் நடத்திய தீவிரவாதத் தாக்குதல்களில் நடவடிக்கைகளில் சில,
அர்ஜெண்டினா
1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தியதி அர்ஜெண்டினாவிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் மீது ஹர்கத் அல் – ஜிகாத் அல் – இஸ்லாமி எனும் தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 79 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 242 பொது மக்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய ஹர்கத் அல் – ஜிகாத் அல் – இஸ்லாமி எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.[15]
ஆப்கானிஸ்தான்[
மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையின் படி 2006 ஆம் ஆண்டு வரை தாலிபான்கள் மற்றும் ஹெஸ்ப் – இ இஸ்லாமி குல்ப்புதீன்ஆகியவற்றின் தாக்குதல்கள் மூலம் குறைந்தபட்சம் 669 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்கிறது. மேலும் 350 ஆயுதத் தாக்குதல்கள் பொது மக்கள் மீது நடத்தப்பட்டன எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.[16]
தஜிக்கிஸ்த்தான்
செப்டம்பர் மாதம் 3 ஆம் தியதி 2010 ஆம் ஆண்டு தற்கொலைத் தாக்குதலில் 2 காவலர்கள் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமுற்றனர். தஜிக்கிஸ்த்தான் அரசு இத்தீவிரவாதச் செயல்களுக்கு இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆப் உஸ்பெக்கிஸ்த்தான் (Islamic Movement of Uzbekistan) எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைக் குற்றம் சாட்டியது.[17]
உஸ்பெக்கிஸ்த்தான்[
- 16 பெப்ரவரி 1999 ஆம் ஆண்டு நடந்த ஆறு ஊர்தித் தாக்குதல்களில் (car bombs) 16 பொது மக்கள் கொல்லப்பட்டனர் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு அரசு இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆப் உஸ்பெக்கிஸ்த்தான் (Islamic Movement of Uzbekistan) எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைக் குற்றம் சாட்டியது.[18]
- இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆப் உஸ்பெக்கிஸ்த்தான் (Islamic Movement of Uzbekistan) எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு 2004 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தாஷ்கண்ட்டில் நடத்திய தொடர் தாக்குதல்களில் 33 இராணுவ வீரர்கள், 10 காவலர்கள் மற்றும் நான்கு பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[19] அரசு ஹிஸ்ப் உத் – தாஹிர் (Hizb ut-Tahrir) எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைக் குற்றம்சாட்டியது. இத்தாக்குதல்களுக்கு இஸ்லாமிய ஜிகாத் ஒன்றியம் (Islamic Jihad Union (IJU)) பொறுப்பேற்றுக் கொண்டது.[20]
- ஃபுர்காத் காஸிமோவிச் யுசுபோவ் (Furkat Kasimovich Yusupov) என்பவர் மார்ச் 28 அன்று நிகழ்ந்த தாக்குதலுக்காக 2004 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இவர் ஹிஸ்ப் உத் – தாஹிர் (Hizb ut-Tahrir) எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பிற்காக இத்தாக்குதலை நடத்தினார்.[21]
- 30 ஜூலை 2004 தாஷ்கண்டின் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தூதரகங்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.[22] இத்தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிகாத் ஒன்றியம் (Islamic Jihad Union (IJU)) பொறுப்பேற்றுக் கொண்டது.[20]
ரஷ்யா
அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்காக பொது மக்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் 1994 ஆம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. மத்திய ரஷ்யா மற்றும் காக்கேசியாயின் வட பகுதிகளில் அதிக அளவு இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரிவினை வாத நோக்கத்திற்காக இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
- 23 அக்டோபர் 2002 ஆம் ஆண்டில் 40 முதல் 50 செசன்யத் தீவிரவாதிகள் மாஸ்கோவில் திரையரங்கு ஒன்றில் நடத்திய தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 700-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.[23][24]
- செப்டம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டில் பெஸ்லான் பள்ளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[25]
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை காகேசிய எமிரேட் எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பு என அறிவித்தது.[26]
பிரான்சு[தொகு]
- 2015 நவம்பர் 13 அன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் இசிஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.[27]
- 7 சனவரி 2015 அன்று ஒ.ப.நே 10:30 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.[28][29]
துருக்கி[தொகு]
துருக்கியின் ஹெஸ்புல்லா அமைப்பு மற்றும் குர்து சுன்னி அமைப்பு ஆகிய இரண்டும் தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.[30] இவை 2003 நவம்பர் குண்டு வெடிப்பிற்கு காரணமானவை என குற்றம் சுமத்தப்பட்டன. இத்தீவிரவாதத் தாக்குதல்களில் 58 பேர் கொல்லப்பட்டனர்.[31][32]
ஐரோப்பா[தொகு]
மேலும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் பொதுமக்கள் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டுவருகின்றன. 1985 ஆம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிட் நகரின் உணவுச் சாலையின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மேலும் 82 பொதுமக்கள் காயமடைந்தனர்.[33] இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.[34] இத்தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தான் எழுத்தாளர் மற்றும் அல் காயிதா உறுப்பினர் முஸ்தபா செத்மரியம் நாசர் என்பவரை சரணடையுமாறு ஸ்பெயின் கேட்டுக் கொண்டது.[35]
ஈராக்[தொகு]
தற்காலத்தில் மிக அதிக அளவு தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் இடம் ஈராக் ஆகும். 2005 ஆம் ஆண்டின் ஈராக் போரின் போது சுமார் 400 தீவிரவாதத் தாக்குதல்கள் பொதுமக்களின் மீது நடத்தப்பட்டன இதில் சுமார் 2000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[36] 2006 ஆம் ஆண்டின் உலகில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் (6,600) பாதிக்கும் மேற்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் ஈராக்கில் நடைபெற்றது இதில் 13,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது.[37]
பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவர்களாகவும் ஈராக் தீவிரவாதிகள் அறியப்படுகின்றனர். இந்திய செவிலியர்கள் கடத்தப்பட்ட சமயம், விடுவிக்கப்பட்ட பின்னர் செவிலியர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர்.[38]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகள்[தொகு]
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு இஸ்ரேல் பகுதிகளில் பொதுமக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவித்தது.[39] பின்னர் 1988 ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலை அழித்தொழிப்போம் என அறிவித்தது.[40] ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு இஸ்ரேல் பகுதியில் நடந்த பல தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது. குறிப்பாக தற்கொலைத் தாக்குதல்கள்மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள். இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்குப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமிய நாடாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்[41]. மேலும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய அமைதி முன்னெடுப்புகளைக் கெடுக்கும் விதமாகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கழகம் ஆகியவற்றால் தீவிரவாத அமைப்பு என கருதப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். ஆனால் ஹமாஸ் இயக்கம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கமாததால் ரஷ்யா இவ்வியக்கத்தைத் தடை செய்யவில்லை.[42] 2000 முதல் 2005 ஆம் ஆண்டுவரை நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் 39.9% ஹமாஸ் இயக்கத்தால் நடத்தப்பட்டவை ஆகும்.[43] ஹமாஸ் இயக்கம் தனது முதல் தற்கொலைப்படைத் தாக்குதலை 1993 ஆம் ஆண்டு நடத்தியது.[44] மேலும் ஹமாஸ் இயக்கம் இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் இஸ்ரேலை அழித்தொழிப்பதற்காக நடத்தப்படுபவை என்றும் இவை தொடரும் எனவும் இவற்றை நியாயப்படுத்துகிறது.[45]
லெபனான்[தொகு]
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு 1983 ஆம் ஆண்டு அமெரிக்கத் தூதரகத்தில் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 258 அமெரிக்கர்களும் 58 பிரெஞ்சுக்காரர்களும் கொல்லப்பட்டனர்.[46] இந்த அமைப்பானது அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், பஹரைன், பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இவ்வமைப்பத் தீவிரவாத அமைப்பாகக் கருதி தடை செய்துள்ளன.[47][48][49][50][51] இந்தத் தீவிரவாத அமைப்பிற்கு ஈரான் அதிக அளவு நிதி வழங்கி வருகிறது.[52]
சவுதி அரேபியா[தொகு]
அமெரிக்கா 1990 ஆம் ஆண்டு சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து தனது படைகளை சவுதி அரேபியாவிற்கு அனுப்பியது. அங்கு நடந்த வளைகுடாப் போரில் அமெரிக்கக் கூட்டணிப் படைகள் வெற்றி பெற்றன. சவுதி அரேபியாவில் தான் இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மெக்காமற்றும் மெதினா அமைந்துள்ளன. இந்நகரங்களில் அமெரிக்கப் படைகள் நுழைந்ததை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விரும்பவில்லை. மேலும் ஒசாமா பின் லாடன் அமெரிக்காவிற்கு எதிராக ஜிகாத்தை அறிவித்ததும் இந்நிகழ்வின் காரணமாகத்தான் என நம்பப்படுகிறது.[53]
ஏமன்[தொகு]
உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஏமன் முக்கியமான கூட்டாளி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.[54]
எகிப்து[தொகு]
எகிப்து நாட்டைச் சேர்ந்த சுணி இஸ்லாமியக் குழு ஆகும். இக்குழுவானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத இயக்கம் என தடை செய்யப்பட்டுள்ளது.[55] இக்குழுவின் முக்கிய நோக்கம் எகிப்து அரசை அகற்றிவிட்டு முகம்மது முர்ஸியா தலைமையில் ஓர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது ஆகும்.[56] இந்த இயக்கம் 1992 முதல் 1998 வரை எகிப்து அரசுக்கு எதிரான தாக்குதல்களின் மூலம் 796 எகிப்தியக் காவலர்களையும், போர் வீரர்களையும் மற்றும் பொது மக்களையும் கொன்றுள்ளது.[57] இந்த அமைப்பிற்கு ஈரான் மற்றும் சூடான் அரசுகள் ஆதரவளிக்கின்றன. மேலும் அல் காயிதா இந்த அமைப்பின் தீவிரவாதச் செயல்களுக்கு உதவுகிறது.[11] 2008 செப்டம்பர் 17 அன்று ஏமனில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.[58]
அல்ஜீரியா[தொகு]
1992 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அல்ஜீரியாவில் ஆயுதம் தாங்கிய இஸ்லாமியக் குழுக்களின் தீவிரவாதச் செயல்கள் உக்கிரமாயிருந்தன. இஸ்லாமியர்களின் மக்கட்தொகையை அதிகரிக்கும் எண்ணத்தில் அவை செயல்பட்டன. இதற்கான பெரிய எண்ணிக்கையிலான பொதுமக்களை இன அழிப்பு செய்தன. ஒட்டு மொத்தக் கிராமத்திலுள்ளவர்களையும் கொன்றொழித்தனர். அல்ஜீரிய அரசை அகற்றிவிட்டு அங்கு இஸ்லமிய அரசை உருவாக்க வேண்டும் என விருப்பின.[59] அல்ஜீரியாவில் வசிக்கும் வெளிநாட்டினரைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. 100 க்கும் அதிகமான வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். சமீபகாலங்களில் ஏற்கனவே பிளவுற்ற இரண்டு குழுக்கள் அல் காயிதாவின் கீழ் இணைந்து இஸ்லாமிக் மொஹரப்எனும் பெயரில் இயங்கிவருகின்றன.[60][61][62]
கனடா[தொகு]
கனடிய அரசின் அறிக்கையில் இஸ்லாமித் தீவிரவாதம் கனடாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[63] கனடிய பாதுகாப்புப் புலனாய்வு சேவைத் துறையின் உளவுப் பிரிவு இப்பிரச்சனையைத் தீவிரமாக கண்காணிக்கிறது.[64] 2006 ஆம் ஆண்டில் தெற்கு ஒண்டாரியோவில்விமானத் தாக்குதலில் ஈடுபட்ட 18 அல் காயிதா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஓண்டாரியா பகுதியில் பிற தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர்.[65]
இஸ்லாமியத் தீவிரவாத குழுக்களின் பட்டியல்[தொகு]
உலகில் இயங்கி வரும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களில் சில கீழே,
- அல் காயிதா
- அல் சபாப், சோமாலியா
- அல் நுஸ்ரா முன்னணி
- அல்-உமர்-முஜாகிதீன்
- அல் உம்மா
- அல்-பதர்
- அல் ஜமா அல் இஸ்லாமியா
- அக்கானி பிணையம்
- அபு சயாப்
- இந்தியன் முஜாகிதீன்
- இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு
- சிமி
- உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்
- அல்-ஜிகாத்
- கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்
- தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமி
- தாலிபான்
- டெகரிக்-இ-தாலிபான்
- போகோ அராம், நைஜீரியா
- லஷ்கர்-இ-ஜாங்வி
- லஷ்கர்-ஏ-தொய்பா
- வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன்
- ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி
- ஹர்கத்-உல்-முஜாகிதீன்
- ஹிஸ்புல் முஜாகிதீன்
- ஹிஸ்புல்லா
- ஜே.எம்.ஜே.பி
- ஜமா த் உத் தவா, பாக்கிசுத்தான்
- ஜெய்ஸ்-இ-முகமது
தாக்குதல்கள்[தொகு]
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்களில் சில கீழே,
- 18 ஏப்ரல் 1983 லெபனானில் அமெரிக்கத் தூதரகம் குண்டு வெடிப்பு.[66]
- 23 அக்டோபர் 1983 – பெய்ரூட் குண்டு வெடிப்பு.[67]
- 26 பிப்ரவரி 1993 – நியூயார்க் உலக வர்த்தக மையக் குண்டு வெடிப்பு.[68]
- 13 மார்சு 1993 – மும்பை குண்டு வெடிப்பு.
- 28 ஜூலை 1994 – பியூனாஸ் ஐரஸ் (அர்ஜெண்டினா) குண்டு வெடிப்பு.[69]
- 24 டிசம்பர் 1994 – ஏர் பிரான்ஸ் விமானக் கடத்தல்.[70]
- 25 ஜூன் 1996 – கோபார் டவர்ஸ் (சவுதி அரேபியா) குண்டு வெடிப்பு.[71]
- 17 நவம்பர் 1997 – எகிப்து குண்டு வெடிப்பு (லுக்ஸார் தாக்குதல்).[72]
- 14 பிப்ரவர் 1998 – கோவை குண்டு வெடிப்பு.
- 7 ஆகஸ்டு 1998 – தான்ஸானியா அமெரிக்கத் தூதரகம் குண்டு வெடிப்பு.[73]
- 4 செப்டம்பர் 1999 – ரஷ்ய தொடர் குண்டு வெடிப்பு.[74]
- 12 அக்டோபர் 2000 – ஏமன் துறைமுகத் தாக்குதல்.[75]
- 11 செப்டம்பர் 2001 – உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத் தாக்குதல்.
- 13 டிசம்பர் 2001 – இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்
- 27 மார்ச் 2002 – இஸ்ரேல், ஹோட்டல் நத்தானியா தாக்குதல்.[76]
- 30 மார்ச் மற்றும் 24 நவம்பர் 2002 – இந்தியா, இந்துக் கோயில்கள் தாக்குதல்.[77]
- 24 செப்டம்பர் 2002 _ அகமதாபாத் இந்துக் கோயில் தாக்குதல்.[78]
- 12 அக்டோபர் 2002 – இந்தோனேசியா பாலி குண்டு வெடிப்பு
- 16 மே 2003 – மொராக்கோ குண்டு வெடிப்பு.[79]
- 11 மார்ச் 2004 – ஸ்பெயின், மாட்ரிட் குண்டு வெடிப்பு.[80]
- 1 செப்டம்பர் 2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்
- 2 நவம்பர் 2004 – தியோ வன் கோ (திரைப்பட இயக்குநர்) படுகொலை.
- 5 ஜூலை 2005 – அயோத்யா இந்துக் கோயில் தாக்குதல்.[81][82]
- 7 ஜூலை 2005 – இலண்டன் குண்டு வெடிப்பு.[83]
- 23 ஜூலை 2005 _ எகிப்து குண்டு வெடிப்பு.[84]
- 29 அக்டோபர் 2005 – தில்லி குண்டு வெடிப்பு[85]
- 9 நவம்பர் 2005 – ஜோர்டான் தொடர் குண்டு வெடிப்பு.[86]
- 7 மார்ச் 2006 – இந்தியா, வாரணாசி குண்டு வெடிப்பு.[87]
- 11 ஜூலை 2006 – இந்தியா, மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்புகள்
- 14 ஆகஸ்டு 2007 – ஈராக் குண்டு வெடிப்பு.[88]
- 26 ஜூலை 2008 – இந்தியா, அகமதாபாத் குண்டு வெடிப்பு
- 13 செப்டம்பர் 2008 – இந்தியா, தில்லி தொடர் குண்டு வெடிப்பு
- 26 நவம்பர் 2008 – மும்பைத் தொடர் தாக்குதல்
- 25 அக்டோபர் 2009 – ஈராக், பாக்தாத் குண்டு வெடிப்பு.[89]
- 28 அக்டோபர் 2009 – பாகிஸ்தான், பெஷாவர் குண்டு வெடிப்பு.
- 3 டிசம்பர் 2009 – சோமாலியா குண்டு வெடிப்பு.
- 1 ஜனவரி 2010 – பாக்கிஸ்தான் குண்டு வெடிப்பு.
- 13 மே 2011 – பாகிஸ்தான் குண்டு வெடிப்பு.[90]
- 13 ஜூலை 2011 – 2011 மும்பை குண்டு வெடிப்புகள்
- 15 ஏப்ரல் 2013 – இலண்டன் குண்டு வெடிப்பு.[91]
- 22 மே 2013 – இலண்டன் தாக்குதல்.[92]
- 22 செப்டம்பர் 2013 – கென்யா தாக்குதல்.[93]
- 1 மார்ச் 2014 – சீனா இரயில் நிலையத் தாக்குதல்.[94]
- 14-04-2014 இல் 223 நைஜீரிய இக்போ பழங்குடி மாணவிகள் கடத்தல்.[95]
- 8 ஜூன் 2014 பாக்கிஸ்தானின் ஜின்னா விமான நிலையத் தாக்குதல்
- 10 ஜூன் 2014 நைஜீரிய பெண்கள் 20 பேர் கடத்தல்.[96]
- 07 ஜனவரி 2015 சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நிகழ்வு.[97]
- 13 நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்
தொடரும்…..