இன்னும் எத்தனை ஆண்டுகள் டோனிக்கு அணித்தலைவர் பதவி? பிளமிங்

738
இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு அணித்தலைவராக இருப்பார் என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க கால கட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக விளையாடினார்.

தற்போது அவர் அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணித்தலைவரான டோனி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார். இவரால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுக்கு இந்திய அணித்தலைவராக பணியாற்ற முடியும்.

ஆனால் 3 நிலைகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம்) அவர் நீண்ட காலம் கேப்டனாக இருப்பாரா என்று எனக்கு தெரியாது.

மேலும் டோனியின் தலைமையின் கீழ் இந்திய அணியின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

SHARE