தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூர்? ஐதராபாத்துடன் இன்று மோதல்

711
ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் தொடரில் ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்த பெங்களூர் அணி சொந்தமண்ணில் இன்று ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூர் அணியில் கெய்ல் இல்லாத போதும் டெல்லி, மும்பை அணிகளை வீழ்த்தி இத்தொடரை வெற்றியுடன் தொடங்கியது. அடுத்து கொல்கத்தா அணிக்கெதிராக வெற்றி பெற இருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் கிறிஸ் லின் ‘கேட்ச்’ காரணமாக தோல்வியடைய நேரிட்டது.

இதன் பின் அணியின் அதிர்ஷ்டம் கைநழுவி விட்டது எனலாம். இதனால், தொடர்ந்து மூன்று தோல்வியுடன் இன்று ஐதராபாத் அணியை சந்திக்கிறது. சொந்தமண் என்பதால் அணிக்கு திரும்பியுள்ள கெய்ல், பார்த்திவ் படேலுடன் இணைந்து நல்ல தொடக்கம் தர முயற்சிக்கலாம்.

இருப்பினும், பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், டிவிலியர்ஸ் போன்றவர்கள் ஒரு போட்டிக்குப் பின், பெரியளவில் சோபிக்கவில்லை. யுவராஜ் போதுமான அளவு ஓட்டங்கள் எடுத்தாலும், பந்துகளை வீணடிக்கிறார்.

பந்துவீச்சில் வருண் ஆரோன், மிட்சல் ஸ்டார்க், மடின்சன் மற்றும் சாகல் என்று திறமையான வீரர்கள் உள்ளனர். அதேநேரம், கடந்த சில போட்டிகளில் எதிரணிக்கு பெரிய இலக்கு நிர்ணயிக்காததால், இவர்களுக்கு வேலையில்லாமல் போனது.

பின்ச் பலம்: ஐதராபாத் அணிக்கு துடுப்பாட்டத்தில் டி20 தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்திலுள்ள பின்ச், வார்னர், டேரன் சமி உள்ளது பலம். அணித்தலைவர் ஷிகர் தவான் ‘பார்ம்’, இர்பான் பதானின் துடுப்பாட்டமும் மீண்டு வந்தால் நல்லது தான்.

வேகப்பந்து வீச்சில் ஸ்டைன், புவனேஷ்வர் குமார் சுழலில் அமித் மிஸ்ரா, கரண் சர்மா கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

SHARE