இயக்குனர் முத்தையா அவர்களின் படங்களை பார்த்தால் ஒரே விஷயம் நன்றாக தெரியும். கிராமத்து வாசனையில் கதைக்களம் அமைப்பார்.
குட்டி புலி, கொம்பன் போன்ற படங்கள் எல்லாம் உதாரணம். தற்போது இளம் நாயகனான கௌதம் கார்த்திக்கை வைத்து அவர் இயக்கியுள்ள படம் தேவராட்டம்.
கடந்த புதன்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்பதால் இன்னும் படம் வசூல் வேட்டை நடத்த வாய்ப்பு உள்ளது.
இதுவரை சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் படம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளதாம்.