43 ஆண்டுகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய சுதந்திர தின நிகழ்வில் இம்முறை பங்கேற்றது.
பாராளுமன்ற மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
1972ம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற அனைத்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றுள்ளமை ஆரோக்கியமான மாற்றம் என ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்ற காரணியின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.