பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பெயரை உச்சரிக்காது உரையாற்றியிருந்தார்.
நேற்று கூடிய பாராளுமன்றத்தில், கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் உரையாற்றிய ஜனாதிபதி குறித்த பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை.
அதற்கான காரணத்தை அவர் குறிப்பிடுகையில், சர்வதேச பயங்கரவாதம் குறித்து நான் படித்து தெரிந்த காரணிகள் உள்ளன. கடந்த 10 நாட்களில் இவற்றை நான் படித்து அறிந்துகொண்டேன். இந்த நான்கு எழுத்து பயங்கரவாதத்தை நாம் பாவிப்பது அவர்களை நாம் அங்கீகரிப்பதை போன்று ஆகிவிடும். சர்வதேச தலைவர்கள் எவரும் இதனை அங்கீகரிக்கவில்லை. நானும் அதனையே கையாள்கின்றேன் என்றார்.
மேலும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். இவர்களது பெயரை குறிப்பிடுவது அவர்களை அங்கீகரிப்பதாக அமையும். இரண்டு எழுத்துக்களையோ நான்கு எழுத்துக்களையோ நான் பயன்படுத்தப்போவதில்லை. அவ்வாறு பயன்படுத்தினால் இந்தப் பயங்கரவாதிகளை நாம் அங்கீகரித்ததாகிவிடும். எனவேதான், இன்றைய பேச்சில் அவர்களது பெயரை நான் உச்சரிக்கவில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.