யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

220

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கில் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

“இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது” என நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்.

வழக்கில் மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த தவறுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிவான், அவற்றில் சிலவற்றை திருத்த முடியும் எனக் கட்டளையிட்டார்.

SHARE