அஜித்தை நேரில் கலாய்த்த தருணம்- தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ஷேக்

227

அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பது பல கலைஞர்களின் ஆசை. ஆனால் ஒரு சிலருக்கே நடந்து வருகிறது, அதே ஆசையில் பல வருடமாக காத்துக் கொண்டிருப்பவர்கள் பலர்.

அப்படி என்னை அறிந்தால் படத்தில் சின்ன காட்சியில் வந்த சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ஷேக். நான் தெனாலி ராமன், நேபாளி, ஏமாலி என்று சில படங்களில் நடித்துள்ளேன். என்னை அறிந்தால் படத்தில் கூட நடித்துள்ளேன், அஜித் அவர்களை கலாய்க்கும் காட்சி அது.

ஆட்டோ ஓட்டுனராக வருவேன், அவர் போலீஸ் என்றதும் சல்யூம் அடிப்பேன். அவர் தட்டிக் கொடுத்து யாரிடமும் சொல்லாதீங்க என்று கூறி அனுப்பி வைப்பார்.

எத்தனையோ பேருக்கு அவருடன் போட்டோ எடுக்க மாட்டோமா என்று ஆசை இருக்கும். எனக்கு அவருடன் நடித்தது மிகப் பெரிய சந்தோஷம் என்று மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

SHARE