வில்லியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள், திட்டுவார்கள் என்று கஷ்டமாக இருந்தது -ஷெரின்

203

பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் மௌன ராகம். இந்த சீரியல் பிரபலம் என்றால் அது முழுக்க முழுக்க ஷெரின், கிருத்திகா என்ற இரு சிறு குழந்தைகளால் தான்.

இருவருக்குமே ரசிகர்களிடம் நல்ல பிரபலம் உள்ளது. அண்மையில் ஷெரினுக்கு அந்த தொலைக்காட்சியே ஒரு விருது கொடுத்தனர்.

அது குறித்து ஷெரின் பேசும்போது, எனக்கு வில்லியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள், திட்டுவார்கள் என்று கஷ்டமாக இருந்தது, பயமும் இருந்தது.

ஆனால் கடைசியில் நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து எல்லோரும் பாராட்டுவது சந்தோஷமாக உள்ளது, விருதும் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

SHARE