உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர், தனது உயிரையும் துச்சமென கருதி, மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஜ.தே.கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ. தே. கட்சியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும், தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்ற கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றது.
இது தொடர்பாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மறுசீரமைப்பது பற்றியும், சமகால நிலைமையிலிருந்து மீண்டெழுந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆராயப்பட்டதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அடுத்துவரும் மூன்று மாத காலப்பகுதியில் கூடுதலான வேலை வாய்ப்புக்களும், சமுர்த்தி அனுகூலங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்.
மேலும், எதிர்க்கட்சியின் போலி குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான பொறிமுறையொன்றும் உருவாக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார் .