பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றினைந்து அமைக்கவுள்ள பரந்துப்பட்ட கூட்டணிக்கான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் முன்னெடுத்த இரண்டாவது பேச்சுவார்த்தையில் 20 சித்தாந்த கொள்கை திட்டங்கள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் 25 கொள்கை திட்டங்கள் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்சிகளையும் எவ்வாறு கொள்கை ரீதியில் ஒன்றினைத்து நிலையான ஒரு அரசியல் கொள்கையினை வகுப்பது தொடர்பில் இரு தரப்பிலானும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இந் நிலையில் இன்று இடம்பெறவுள்ள நான்காவது பேச்சுவார்த்தை மாறுப்பட்டதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.