ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அத்துல வீரரத்ன என்பவரின் மகள் நிபுணி வீரரத்னவும் திருமண பந்தத்தில் இன்று இணைந்துள்ளனர்.
இவர்களின் திருமண நிகழ்வு ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த திருமண நிகழ்வில் இலங்கையில் உள்ள பல முக்கியஸ்தர்களும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த திருமண வைபவத்தை கொழும்பு ஷங்ரீலா நட்சத்திர ஹோட்டலில் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அத்தோடு இவ்வாறே அழைப்பிதழிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 21ஆம் திகதி ஷங்ரீலா நட்சத்திர ஹோட்டலில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, திருமண நிகழ்வுகளை ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது