ஐதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி அணி

233

ஐதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி அணி இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு ஆர்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 162 ஓட்டங்களை குவித்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து ஐதராபாத் அணியின் வெற்றியிலக்கை கடந்தது.

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 56 ஓட்டத்தையும், தவான் 17 ஓட்டத்தையும், அணித் தலைவர் ஸ்ரேயஸ் அய்யர் 8 ஓட்டத்தையும், முன்ரோ 14 ஓட்டத்தையும், அக்ஸர் படேல் டக்கவுட் முறையிலும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 8 ஓட்டத்துடனும் ரிஷாத் பந்த் 21 பந்துகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 49 ஓட்டத்துடனும், அமித் மிஷ்ரா ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் கீமோ பவுல் 5 ஓட்டத்துடனும் ட்ரண்ட் பொல்ட் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஸ்வர்குமார் மற்றும் கலில் அஹமட் 2 விக்கெட்டுக்களையும், தீபக்ஹுடா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதன்  மூலம் டெல்லி அணி எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE