கியாரா அத்வாணியின் உண்மையான பெயர்!

234

மகேஷ் பாபு நடித்த பரத் எனும் நான் படத்தில் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலம் ஆனவர் கியாரா அத்வாணி. தற்போது அவர் லாரண்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரிமேக்கில் நடித்து வருகிறார்.

இவரது உண்மையான பெயர் ஆலியா என்றும், அதை நடிகர் சல்மான் கான் தான் மாற்ற சொன்னார் என்று கியாரா அத்வானி கூறியுள்ளார்.

“ஏற்கனவே ஆலியா பட் இருக்கிறார், ஒரே பெயரில் இரண்டு நடிகைகள் இருக்கக்கூடாது என சல்மான் கான் தான் பெயரை மாற்றிவிடு என கூறினார். ஆனால் கியாரா என்கிற பெயரை நான் தான் தேர்ந்தெடுத்தேன்.

தற்போது வீட்டில் கூட என்னை கியாரா என்று தான் அழைக்கின்றனர்” என கூறியுள்ளார் அவர்.

SHARE