கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை அறிமுகம் – கே.டீ.எஸ்.ருவான் சந்திர

195

கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவான் சந்திர தெரிவித்துள்ளார்.

புதிய அடையாள அட்டைக்கு கடற்றொழிலாளர்களின் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் போதைப்பொருள் அற்ற நாடு என்ற வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்க்கொள்வதற்கு இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டத்தின் கீழ் 5000 மீன்பிடி வள்ளங்களை சேர்ந்த 30,000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

எதிர்வரும் காலங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் முழு விபரமும் இதன் கீழ் பெற்றுக் கொள்ளப்படும். அத்தோடு,  தற்பொழுது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து மீன்பிடி வள்ளங்கள் வெளியேறும் பொழுதும் பிரவேசிக்கும் பொழுதும் அது தொடர்பான விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் துறைமுகங்களுக்கு வருவோர் செல்வோர் தொடர்பான விபரங்களை அறிந்துக் கொள்ள இந்த அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்துகின்றமையும் குறிப்பிடதக்கது.

SHARE