ஐக்கியநாடுகளின் தடையை மீறிய குற்றச்சாட்டில் வடகொரிய கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
நிலக்கரியுடன் பயணித்துக்கொண்டிருந்த எம்பி வைஸ்ஹொனெஸ்ட் என்ற கப்பலையே அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
சீனா உட்பட உலகநாடுகளிற்கு விற்பனை செய்வதற்காகவே இந்த கப்பலில் வடகொரியா நிலக்கரியை அனுப்பியது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
முதல்தடவையாக இவ்வாறு கப்பலொன்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் வடகொரிய அரசாங்கத்திற்கு கடும் அழுத்தத்தை கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கப்பலையே அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.இந்த கப்பலில் பெருமளவு பொருட்களை கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவிற்கு பாரிய இயந்திர சாதனைங்களை கொண்டு செல்வதற்கும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுவது வழமை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியா ஐநா தடைகளை மீறி சட்டவிரோத நிலக்கரி வர்த்தகத்தில ஈடுபட்டுள்ளதுடன் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது ஏவுகணை மற்றும் அணுவாயுத திட்டங்களிற்கு பயன்படுத்துகின்றது என அமெரிக்கா குற்றசம்சாட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.