இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைந்து பின் இலங்கைக் கிரிக்கெட்டின் பயிற்சியாளர் பாசறையில் இணைந்து செயற்பட்டு வந்த, இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது இராஜினாமா கடிதத்தை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.