அம்பாறையில் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

432

 

அம்பாறை சாய்ந்துமருது பிரதேசத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீமுக்கு எதிராக வாக்களித்த மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் கொடும்பாவியையும் நிலத்தில் போட்டு எரிக்க முற்பட்டுள்ளார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையை நிறைவு செய்த பின்னர் ஜும்ஆ பள்ளிவாசல் முன் ஒன்றுகூடிய பெருந்தொகையானமக்கள் கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியைத் தாங்கிவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ஹக்கீம் ஒழிக”, “வாக்களிக்காத ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு முதலமைச்சர் பதவியா?”, “பெருந்தொகை வாக்குகளை வழங்கிய சய்ந்தமருது மக்கள் சார்பில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கக்கூடாதா?”, “ஹக்கீமே உனது துரோகத்தனத்துக்கு முடிவில்லையா?” போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஹக்கீமின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டபோது கல்முனை காவல்துறையினர் அதை எரிக்கவிடாது தடுத்தது மட்டுமல்லாமல் அக்கொடும்பாவியை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

SHARE