இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் 2019 ஆண்டு பிராந்திய மகாநாடும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களின் அரசியலில் 20 வருட சாதனையும்

257
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் 2019 ஆண்டு பிராந்திய மகாநாடும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களின் அரசியல் 20 வருட அரசியல்  விழா சாதனையும் 48 வது பிறந்த நாளும் இன்று 12.05.2019 பதுளை தபால் கட்டடிட கூட்டத்தொகுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக விளையாட்டு¸ வெளிநாட்டு வேவைவாய்பு  டிஜிட்டல் தொலைதொடர்பு அமைசச்ர் ஹரின் பெர்னாண்டடோ அவர்கள் கலந்துக் கொண்;டார்.
இந் நிகழிவிற்கு பெரும் திறாலன இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் உறுப்pனர்பகளும்  உயர்மட்ட அதிகாரிகளும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துக் கொண்டனர்  இதன் போது மாணவகளின் கலை நிகழ்ச்சிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசில்கள் வழங்கள் போன்றனவும் நடைபெற்றன
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களின் வரலாறு
மலையகத்தின் 200 ஆண்டு கால வரலாற்றில் அந்தந்த காலப்பகுதிகளில் பல தலைவர்கள் உருவாகி மறைந்துள்ளார்கள். இவர்களினால் மலையக மக்களின் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பயனாக பெருந்தோட்ட மக்கள் இன்று இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலப்பகுதியில் அடிமைகள் என அழைக்கபட்டவர்கள் இன்று நாட்டினை ஆளும் ஆட்சிபீடத்தினை தீர்மானிக்கும் சக்திகளாகவும் இருந்து வருகின்றனர். மலையக மக்களின் அபிவிருத்தி என்பது தங்க தட்டில் வைத்து கொடுக்கபட்டது அல்ல. அவ்வப்போது வாழ்ந்த தலைவர்களின் சானக்கியத்தால் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அவர்கள் விட்டுச் சென்ற அவர்களின் கனவுகளை மேலும் முன்னெடுத்து செல்ல இன்று மலையத்தில் பலர் உருவாகி உள்ளார்கள். மலையகத்தின் விடியலை நோக்கிய பயணங்கள் பல ஆண்டுகளாக தொடர்கின்ற போதிலும் அவை வெற்றி காணாத வரலாற்று பதிவுகளே அதிகம். இருப்பினும் மக்கள் மத்தியிலும் சரி வரலாற்று பக்கங்களிலும் சரி சாதனை நாயகனாக இடம்பிடித்தவர்கள் சிலரே
அவர்களில் ஒருவர் தான் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் பசறை தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளருமான வடிவேல் சுரேஷ் அவர்கள். இவர் தனது 48 வது அகவையில் இன்று (12) காலடி வைக்கின்றார் அதேவேலை அரசியல் வாழ்க்கையில் 20 வருடத்தை பூர்த்தி செய்கின்றார். இதனையொட்டி இந்த கட்டுரை வரையப்படுகின்றது.
மலையகத்தில் தொடர்ந்து 20 வருடமாக அரசியலில் மக்களுக்கு  தனி மனிதனாக சேவை  செய்வது என்பது பெரிய விடயமே. மலையத்தை பொருத்த வரையில் பரம்பரை அரசியலும் கூட்டணி அரசியலும் பணபல அரசியலுமே மேல் ஒங்கி உள்ளது இன் நிலையில் தனி நபராக இருந்து இவர் செயற்பட்டு வருவது பாராட்டதக்க  ஒன்றாகும்
இவர் 12 மே மாதம் 1971 ஆம் ஆண்டு திரு. சின்னு வடிவேல்தேவர் அவர்களுக்கும் திருமதி. வடிவேல் தங்கமணி அவர்களுக்கு புதல்வராக பிறந்த இவர் அவருக்கு மிகவும் பிடித்தமான அரசியல்துறைக்கு காலடி வைக்கின்றார் மலையகத்தின் பழமையான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்;பு கிடைத்தது. இவர் இளைஞராக காணப்பட்டதினால் துடிப்புடன் நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. முன்னால் அமைச்சரும் தற்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர். ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடன் கைகோர்த்து மலையக மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னின்று உழைத்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக செயலாளராக செயற்பட்ட இவர்; உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு தொழிலாளர்சார் மகா நாடுகளில் கலந்துக் கொண்டு உள்ளார்.
இவரின் முறையான தலைமைத்துவ நிர்வாக செயற்பாடு காரணமாக ஊவா மாகாணம் பதுளை மாவட்ட மக்கள் நலசேவைக்காக நுவரெலியா மாவட்;டத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் பதுளை மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்படுகின்றார். அங்கும் திறமையாக செயற்பட்டார் இந்நிலையில் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் பதுளை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகின்றார். இதன் பயனாக கட்சி அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதி சுகாதார அமைச்சராக 2005 முதல் 2010 வரை நாடு முழுவதும் செயற்படுவதற்கான அறிய வாய்ப்பு கிடைக்கின்றது.
இந்த காலப்பகுதி ஊவா மாகாண பெருந்தோட்ட மக்களின் சுகாதார வளர்ச்சின் ஒரு பொற்காலமாக கருதப்படுகின்றது. தனியார்மயமாக இருந்த பெருந்தோட்ட சுகாதாரத்துறையை அரசமயமாக்கி சுமார் 61 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை தரம் உயர்த்தினார். இவற்றில்  ஊவா மாகாண அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களும் நன்மை அடையும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி அதற்கு தேவையான வைத்தியர்கள் சேவையாளர்கள் அதிகாரிகள் உட்பட உத்தியோகஸ்தர்கள் அனைத்தும் வழங்கப்பட்டு தற்போதும் அவை சிறப்பாக செயற்;பட்டு வருகின்றன. அது மட்டும் அல்லாது சுகாதாரத்துறையில் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகள் 1500 மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டு அவர்கள் அரச சுகாதார ஊழியர்களாக இன்றும் செயற்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது எமது நாட்டின் யுத்த காலப்பகுதியில் 700 க்கும் மேற்பட்ட பெருந்தோட்ட இளைஞர்கள் பயங்கரவாதிகள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ப10ஸா சிறைச்சாலைக்கு நேரடியாக சென்று அனைவரையும் விடுதலை செய்து அவர்களுக்கு வாழ்வழித்த விடயம் வரலாற்று சாதனையாகும்.
இக்காலகட்டத்தில் மக்கள் சேவையில் தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தினையும் அதன் பயன்பாட்டினையும் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கம் இவரினால் உதயமாகின்றது. இதன் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு மாபெரும் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த இத்தொழிற்சங்கத்தின் பொதுச்செயளாலராகவும்  இவர் செயற்பட்டார்.
தொடர்ந்து 2011 நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடுகின்றார். இறுதியில் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினாலும் காட்டிக்கொடுப்பு செயற்பாட்டினாலும் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்;பு ஏற்படுக்pன்றது. தொடர்ந்து மனம் சளிக்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பசறை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசகராகவும் செயற்படுகின்றார். இந்த காலப்பகுதியில் மூவின மக்களுக்கும் தனது சேவையை முன்னெடுக்கின்றார். இந்த காலப்பகுதியில் இந்த நாட்டின் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். இவரின் செல்லபிள்ளையாக இருந்ததினால் பசறை தேர்தல் தொகுதி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பசறை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக உரிய முறையில் செயற்பட்டதினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மூலம் போட்டியிட்டு ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையை ஐக்கிய தேசிய கட்சி கைபற்றியதன் காரணமாக கட்சி அரசியலில் மாகாண தமிழ் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த காலமும் ஊவா மாகாண பெருந்தோட்ட மக்களின் கல்வி அபிவிருத்திக்கு கிடைத்த பொற்காலமாகும். தனது ஆட்சியின் குறித்த காலத்தில் ஊவா மாகாணத்தின் பெருந்தோட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது¸ பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்லாது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள்  உதவி ஆசிரியர் நியமனங்கள் உட்பட பாடசாலைகளுக்கான சிற்றூழியர் நியமனங்கள் பல வழங்கப்பட்டுள்ளன. இதன் பயனாக கல்வித்துறையில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டு உள்ளன. அத்துடன் பதுளை மாவட்டத்தில் வரலாறு காணாத சரித்திர நிகழ்வாக தமிழ் சாகித்திய விழாவினை எடுத்துரைக்கலாம். இன்றும் எவராலும் நினைத்து கூடப்பார்க்க முடியாத வகையில் இந்நிகழ்வு அனைவர் மனதிலும் நிலைபெற்றுள்ளது. இவர் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக பதவியேற்றதன் பயனாக பல வெற்றிகளை எம் சமுதாயம் தொட்டது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை.
தொடர்ந்து ஊவா மாகாணத்தில் சுகாதார பிரதி அமைச்சராகவும்¸ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பசறை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகவும். ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோகசராகவும் செயற்பட்டதன் காரணமாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச நியமனங்கள் இது வரை காலப்பகுதியில் 7548 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. பண்முகப்படுத்தபட்ட நிதி உட்பட அரசின் பல பில்லியன் ரூபா நிதிகள் மூலம்; தோட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகள். பாதை அமைப்பு¸ வீடமைப்பு திட்டங்கள்¸ ஆலய நிர்மாணங்கள் சனசமூக நிலையங்கள்¸ இயற்கை அனர்த்த பாதிப்புகள்¸ நீர் விநியோகம்¸ மின்சார விநியோகம்¸ கலாச்சார மண்டபங்கள் அமைப்பு¸ தோட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து பஸ் சேவை¸ மைதான அமைப்புக்கள்¸ விளையாட்டு கழகங்களுக்கான பொருட்கள் விநியோகம்¸ சுயதொழில் ஏற்பாடுகள்¸ இளைஞர் யுவதிகளுக்கான ஊக்குவிப்புகள் உட்பட அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் தோட்டபுறங்களில் முன்னெடுக்கப்பட்டன. தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தனது மகத்தான மக்கள் சேவையின் மூலம் பெருந்தோட்ட சொந்தங்களின் உயிர்மூச்சாக இருக்கின்ற வடிவேல் சுரேஷ் அவர்களுக்கு ‘மார்ஷல் ஆர்ட்ஸ்;’ எனும் ஜப்பானிய பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் அளித்து கௌரவித்துள்ளதுடன் லண்டன் வாழ் ஈழத் தொண்டர் சமூக அமைப்பினால் ‘மலையக மாணிக்க கங்கை’ பட்டமும் கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேலையில் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகின்றது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 52.318 வாக்குகளால் தெரிவு செய்யபடுகின்றார்.
இதனுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பதவியேற்றார். இதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உட்பட பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றார்.  வெளிநாடு;களில் நடைபெறும் பல தொழிலாளர்சார் மகா நாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து வருகின்றார்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கங்களில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு மாற்றத்தில் கட்சி அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பொறுபேற்கின்றார். தொடர்ந்து 52 நாட்கள் மாத்திரம் இருந்த இந்த அரசாங்கம் உயர் நீதிமன்ற உத்தரவின் படி மாற்றபட்டு ஐக்கிய தேசிய முன்னனியில் கட்சி அரசியலில் மீண்டும் 2019 பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பொறுபேற்கின்றார். இந்த காலப்பகுதியில் கட்சி அரசியல் செய்ததன் பயனாகவே ஊவா மாகாணத்திற்கு தழிழ் பேசும் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு கிடைத்;தது. இதனை பலர் பல்வேறு விதமாக விமர்சித்தனர். தற்போது விமர்சனங்களை விட பல்மடங்கு சேவைகள் பதுளை  மாவட்ட மக்களுக்கு கிடைக்கபெற்று வருகின்றது.
தற்போது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு வர்த்தமானி மூலம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகராக பொறுப்புகளை இராஜாங்க அமைச்சருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி¸ சிலாபம் பெருந்தோட்ட கம்பனி¸ கல்ஓயா சீனி தொழிற்சாலை¸ பெருந்தோட்ட முகாமைத்துவ கண்கானிப்பு பிரிவு¸ தெங்கு அபிவிருத்தி அதிகார சபை¸ சிறுதேயிலை சிறு இறப்பர் உற்பத்தியாளர்களின் ஊக்குவிப்பு விசேட செயற்திட்டம் போன்றன இராஜாங்க அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயற்பட்டு வருகின்றன.
அமைச்சினை பொறுப்பேற்ற சிறிது காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத்திட்டத்திற்கு காணி வழங்கள்¸ பசுமை பூமி காணி உரித்து வழங்கும் செயற்திட்டம்¸ சிறுதேயிலை சிறு இறப்பர் உற்பத்தியாளர்களின் ஊக்குவிப்பு விசேட செயற்திட்டம்¸ பெருந்தோட்ட கண்காணிப்பு பிரிவினால் தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ்¸ பாடசாலைகளுக்கு தலா 02 ஏக்கர் காணி பெற்றுக் கொடுத்தல்¸ ஆலயங்களுக்கு தலா 02 ஏக்கர் தேயிலை காணி வருமானத்திற்காக வழங்கள்¸ பெருந்தோட்டங்களில் இளைஞர்களுக்காக மைதானங்கள் அமைக்க காணி ஒதுக்கீடுகள் போன்றன உள்ளடக்கபடுகின்றன.
தொடர்ந்து  இந்த சேவைகளுடன் மேலும் மலையக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திகாக
இவரினது சேவை தொடரட்டும்….
SHARE