கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து 2ஆம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.
கடந்த வாரம் தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்தவகையில் வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு, இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்களின் பாடசாலை பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் பாடசாலைகளில் இன்றைய தினமும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டுள்ளது.