வடகிழக்கு இணைப்பே முஸ்லீம் மக்களின் பாதுகாப்பு-முஸ்லீம் போராளிகளின் உயிர்த்தியாகம் மதிக்கப்படவேண்டும்

419

 

அண்மையில் கண்டியிலும் அம்பாறையிலும் ஏற்பட்ட முஷ்லிம்மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் சிறுபான்மை சமூகத்திற்கு பெரும்பான்மை சிங்கள மக்களால் பாதுகாப்பு இல்லை என்பதையே வலியுறுத்தியுள்ளது. 1911ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் காலத்துக்கு காலம் சிங்கள முஷ்லிம் குழப்பம் அல்லது தமிழ் சிங்கள குழப்பம் ஏற்பட்டே வரலாறே தொடர்கிறது.
தமிழ்பேசும் மக்களை பொறுத்தவரை வடகிழக்கு தாயகத்தில் தமிழர்களும் முஷ்லிம்களும் இணைந்து வாழ்ந்துவரும் ஒரு நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகவே வடகிழக்கு மாகாணம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வேண்டியே இலங்கைதமிழரசுக்கட்சியின் நிறுவுணர் தலைவர் தந்தைசெல்வா 1949ம் ஆண்டு தொடக்கம் தமது அரசியல் பாதையை முன்னகர்த்திவந்தார்.

இதில் அப்போதய முஷ்லிம் அரசியல் தலைவர்களும் அசையாத நம்பிக்கையுடன் தமிழ் தலைவர்களுடன் இணைந்து தமது அரசியலை தமிழ்தேசிய அரசியலாக முன்னெடுத்தனர் இதில் மறைந்த அஷ்ரப் அவர்களும் முழுமையாக தமிழ்தேசிய அரசியலுடன் இணைந்து செயல்பட்டவர் அதனால்தான் 1976 மே 14,ம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் தந்தைசெல்வா தலைமையில் நிறைவேற்றப்பட்டபோது மறைந்த அஷ்ரப் அவர்களும் அதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டமையை மறுப்பதற்கில்லை,
அந்த வட்டுக்கோட்டை தீரமானத்தின்பிற்பட்ட காலத்தில் அகிம்சைரீதியான அரசியல்போராட்டம் ஆயுதரீதியான அரசியல் போராட்டமாக மாறியது பல தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினர் தமிழ் இளைஞர்களுடன் முஷ்லிம் இளைஞர்களும் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி பல்வேறுபட்ட அமைப்புக்களில் இணைந்தனர் விடுதலைக்காக சுமார் 36,இயக்கங்கள் பல்வேறுபட்ட பெயர்களில் 1977 தொடக்கம் 1986,வரை இயங்கினர் அதில் அநேகமான விடுதலை இயக்கங்களில் முஷ்லிம் இளைஞர்களும் இணைந்து போராடியவரலாற்றை எவரும் மறுதலிக்க முடியாது.

1986தொடக்கம் படிப்படியாக தமிழ் இயக்கங்களிடையே மோதல் ஏற்பட்டது இதனால் 1987 இலங்கை இந்திய ஒப்பந்ததுடன் தமிழீழவுடுதலைப்புலிகள் தவிர்ந்த அனைத்து தமிழ் இயக்கங்களும் போராட்ட அரசியலை கைவிட்டு அரசியல் கட்சிகளாக மாறின. ஆனால் தமிழீழவிடுதலைப்புலிகள் மட்டும் தொடர்ந்தும் தமது ஆயுதபோராட்டத்தை கைவிடவில்லை அப்போதும் முஷ்லிம் இளைஞர்கள் சிலரும் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொள்கைக்காக போராடினர் இதைபொறுத்துக்கொள்ளாத இலங்கை அரசு தமிழ் முஷ்லிம் மக்கள் மத்தியில் குரோதமனப்பாங்கை வளர்த்ததுமட்டுமன்றி பல முஷ்லிம் இளைஞர்களை ஊர்காவல்படையினர் என்ற போர்வையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தினர் அதில் வெற்றியும் கண்டனர்
அதன் உச்சம் கிழக்குமாகாணத்தில் தாண்டவம் ஆடியது அதனால்தான் 1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்ஊர்காவல்படையினரை ஏவி நடாத்தப்பட்டதமிழ் கொலைகள் சிலவே இவை,

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை . 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 எட்டு ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. காத்தான்குடி ஏறாவூர் போன்ற இடங்களில் முஷ்லிம்மக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதன்தாக்கம் வடமாகாணத்திலும் பரவும் வாய்ப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமை யாழ்பாணத்தில் குடியிருந்த முஷ்லிம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதைபலர் பலவிதமாக விமர்சனம் செய்தனர் ஆனால் தமிழீழவிடுதலைப்புலிகள் தலைமை இதன் உண்மையைத்தன்மை தெளிவாக கூறியதும் இதற்காக அவர்களின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மன்னிப்ப கோரியதையும் நாம் அறிவோம்,விடுதலைப்புலிகளால் உயிர் நீத்த முஷ்லிம் போராளிகளை மாவீரர்கள் பட்டியலில் இன்றுவரையும் உள்ளனர் அவர்களில் சிலர் இவர்கள் முஷ்லிம் மாவீரர்கள் தமிழீழ விடுதைப் புலிகள் இயக்க போராளிகளாக உயிர் நீத்துமாவீரர்களான எமது முஸ்லிம் இளைஞர்கள் சிலரது பெயர்கள்

1. வீரவேங்கை சாபீர்
சரிபுதீன் முகமட் சாபீர்
தியாவெட்டுவான், மட்டக்களப்பு.
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண்
ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988
நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு

2. வீரவேங்கை ரகீம் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: ரகீம் வீரச்சாவு:08.05.1986

3. வீரவேங்கை உஸ்மான் கிழங்கு
அப்துல்காதர் சாதிக் யாழ்ப்பாணம். நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: உஸ்மான்கிழங்கு
இயற்பெயர்: அப்துல்காதர் சாதிக் பால்: ஆண் ஊர்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:10.05.1966 வீரச்சாவு:25.08.1986
நிகழ்வு: யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் சமரில் வீரச்சாவு

4. வீரவேங்கை லத்தீப்
முகமது அலியார் முகமது லத்தீப்
ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு.
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: லத்தீப்
இயற்பெயர்:முகமது அலியார் முகமது லத்தீப் பால்:ஆண்
ஊர்: ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரப்பிறப்பு: 16.11.1962 வீரச்சாவு: 24.12.1986 நிகழ்வு:மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ பி ஆர்எல் எப் கும்பல் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

5. கப்டன்
பாறூக்
அகமதுலெப்பை முகமது கனீபா
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 07.01.1987

6. கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன்
பேராறு, கந்தளாய், திருகோணமலை.
நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன்
பால்:ஆண் ஊர்:பேராறு, கந்தளாய், திருகோணமலை. மாவட்டம்:திருகோணமலை
வீரச்சாவு:28.04.1987 நிகழ்வு:திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு

7. வீரவேங்கை ரகுமான் நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:ரகுமான் வீரச்சாவு:08.05.1986

8. கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய், திருகோணமலை.
நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன்
பால்:ஆண் ஊர்: பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரச்சாவு: 28.04.1987
நிகழ்வு: திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு

9. வீரவேங்கை சலீம் வீரச்சாவு:03.07.1987
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

10. வீரவேங்கை நசீர்
இயக்கப் பெயர்: நசீர் இயற்பெயர்: முகமட் நசீர்
பால்:ஆண் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:15.03.1963 வீரச்சாவு:30.12.1987 நிகழ்வு:மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

11. வீரவேங்கை நகுலன்
இயக்கப் பெயர்: நகுலன் இயற்பெயர்:யுனைதீன் பால்:ஆண் ஊர்:அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு:26.06.1988 நிகழ்வு:அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

12. வீரவேங்கை நசீர் இயக்கப் பெயர்:நசீர் இயற்பெயர்:சம்சுதீன் நசீர் ஊர்:ஒலுவில், அம்பாறை.
வீரப்பிறப்பு 19.02.1960 வீரச்சாவு:17.02.1989 நிகழ்வு: மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு

13. வீரவேங்கை ஜெமில் ஜெயாத் முகமது உசைதீன்
இயற்பெயர்:ஜெயாத் முகமது உசைதீன்
ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:28.03.1968 வீரச்சாவு:05.08.1989
நிகழ்வு: மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியில் இந்தியப்படையினருடனான சமரில் வீரச்சாவு

14. வீரவேங்கை சியாத்
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சியாத் இயற்பெயர்:மீராசாகிபு காலிதீன்
ஊர்:சாய்ந்தமருது, அம்பாறை. வீரப்பிறப்பு:18.08.1972 வீரச்சாவு:06.12.1989
நிகழ்வு: பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு

15. 2ம் லெப்டினன்ட் சாந்தன் நைனா முகைதீன் நியாஸ்
இயக்கப் பெயர்: சாந்தன் இயற்பெயர்:நைனா முகைதீன் நியாஸ் ஊர்: நிலாவெளி, திருகோணமலை.
வீரப்பிறப்பு:17.05.1972 வீரச்சாவு:06.02.1990
நிகழ்வு: திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ என் டி எல் எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு

16. வீரவேங்கை அலெக்ஸ்
இயக்கப் பெயர்: அலெக்ஸ் இயற்பெயர்:அகமட் றியாஸ்
ஊர்:மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:23.01.1970 வீரச்சாவு:04.05.1990

17. வீரவேங்கை சுந்தர் (சந்தர்)
அகமட் லெப்பை செப்லாதீன்
இயக்கப் பெயர்: சுந்தர் (சந்தர்) இயற்பெயர்:அகமட் லெப்பை செப்லாதீன்
ஊர்:வேப்பானைச்சேனை, அம்பாறை வீரப்பிறப்பு: 25.02.1973 வீரச்சாவு:25.05.1990

18. வீரவேங்கை கமால் மட்டக்களப்பு வீரச்சாவு:07.06.1990

19. வீரவேங்கை தாகீர்
இயக்கப் பெயர்: தாகீர் இயற்பெயர்:முகைதீன்பாவா அன்சார்
ஊர்: திருகோணமடு, பொலனறுவை, சிறிலங்கா வீரப்பிறப்பு:29.04.1972 வீரச்சாவு:11.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

20. வீரவேங்கை கபூர்
இயற்பெயர்:முகமதுஅலியார் முகமதுசலீம் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு. வீரச்சாவு:11.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு

21. லெப்டினன்ட் ஜெமில் இயற்பெயர்:கரீம் முஸ்தபா
ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990 நிகழ்வு:திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

22. வீரவேங்கை தௌபீக்
இயற்பெயர்:இஸ்மாயில் ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990
நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

23. வீரவேங்கை ஜிவ்றி
இயற்பெயர்:முகம்மது இலியாஸ் ஊர்:4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:05.03.1974 வீரச்சாவு:13.06.1990
நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலையில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

24. வீரவேங்கை தர்சன் இயற்பெயர்:அப்துல்காதர் சம்சி வீரச்சாவு:13.06.1990

25. வீரவேங்கை கலையன்
இயக்கப் பெயர்: கலையன் இயற்பெயர்:கச்சுமுகமது அபுல்கசன்
ஊர்:1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. வீரச்சாவு:14.06.1990
நிகழ்வு: சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

26. வீரவேங்கை அன்வர் வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகள்
இந்த 26 மாவீரர்கள் மட்டுமல்ல இன்னும் அதிகமானவர்கள் உள்ளனர்.
இவ்வாறு தமிழ்முஷ்லிம் உறவுகள் வேரூன்றி இருந்த நிலைமை இன்று சிலகசப்பான சம்பவங்கள் இடம்பெற்றாலும் தமிழ்முஷ்லிம் ஒற்றுமையே தமிழர் இருப்புக்கும் முஷ்லிம்களின் இருப்புக்கும் காத்திரமாக அமையும்

1990 காலப்பகுயில் அப்போதய இலங்கை அரசு முஷ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையில் இணைத்து தமிழர்களுக்கு எதிராக அவர்களை திசைதிருப்பாமல் இருந்திருந்தால் இன்றுவரையும் தமிழ் முஷ்லிம் மக்களிடையே கசப்புணர்வு இருந்திருக்காது தமிழ் முஷ்லிம் மக்கள் ஒன்றாக அரசியல்பணிசெய்வதை எப்போதுமே பேரினவாத சிங்கள தலைமைகள் விரும்பியதாக சரித்திரம் இல்லை பிரித்தாளும் தந்திரோபாயத்தை மாறி மாறி ஆட்சிசெய்த சிங்கள அரசியல் தலைமைகள் எப்போதுமே விரும்பியதில்லை அவர்கள் வடகிழக்கில் தமிழர்களும் முஷ்லிம்களும் இணைந்துவாழ்ந்தால் பலமான தமிழ்பேசும் சமூகமாக மாறுவார்கள் என்பதை அறிந்தே எமக்குள்ளே குரோத சிந்தனைகளையும் வளர்கலானார்கள் இதற்கு சில முஷ்லிம் அரசியல் தலைவர்களும் துணைபோய் உள்ளனர் என்பதையும் மறுதலிக்கமுடியாது,

தற்போது முஷ்லிம் சிங்கள கலவரம் அம்பாறை கண்டி என ஏற்பட்டதற்கு பின்னணியில் அரசியல்வாதிகள் சிலரும் புத்ததுறவிகள் சிலரும் இருந்துள்ளனர் என்பதை முஷ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழமைபோல் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நட்ட ஈடும் பொருட்சேதங்களுக்கு நிதி உதவிகளும் செய்துவிட்டால் எல்லாம்சரி என அரசதரப்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அரசியல் வாதிகளும் நினைக்கின்றனர். இது தற்காலிக நிவாரணம் மட்டுமே இனியும் இப்படியான சம்பவங்கள் நடக்காது என்பதற்கு யார் உத்தரவாதம்?

இனியாவது முஷ்லிம் அரசியல் தலைமைகள் இதய சுத்தியுடன் சிந்தித்து இணைந்த வடகிழக்கில் தமிழர்களும் முஷ்லிம்களும் இணைந்து வாழவேண்டும் என்பதை இந்த அம்பாறை கண்டி சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

இதை இனியாவது முஷ்லிம்தலைமைகள் சிந்தித்து தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் ஐயாவுடன் பேசி வடகிழக்கு தாயகத்தில் பலமான சக்தியாக தமிழரும் முஷ்லிம்களும் இணைந்துவாழ்வதே எதிர்காலத்தில் முஷ்லிம்மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்படும் என்பதை புரிந்தால் சரி.

 

SHARE