உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்நோக்கி வருகின்றது.
பாகிஸ்தானில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வேகமாக பொருளாதாரம் வீழ்சியடைந்து வருகிறது.
இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கானின் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, சர்வதேச நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில், வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தமாகியுள்ளது.
அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் 2 முதல் 3 பில்லியன் டொலர்கள் வரை நிதியுதவியாக பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.