தனி ஒருவன் 2 படம் குறித்து தகவல் வெளியிட்ட இயக்குனர் மோகன் ராஜா

239

தனி ஒருவன் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆர்வமாக பார்த்த ஒரு படம். இப்படம் முன்பு வரை ரீமேக் படங்கள் எடுக்கும் இயக்குனர் என்ற பெயரை மோகன் ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்த படம்.

ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் கூட மிகப் பெரிய வெற்றி கொடுத்த படம் என்று கூறலாம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

டுவிட்டரில் மோகன் ராஜா தற்போது, தனி ஒருவன் 2 கதைக்கான வேலையில் இருந்த போது என்னுடைய உதவியாளர்களிடம் எதிர்ப்பார்ப்பை தொட்டுவிடலாமா என்று கேட்டேன், அதற்கு அவர்கள் 200 % தொட்டுவிடலாம் என்றனர்.

உடனே போன் அடிக்கிறது அதில் இயக்குனர் ராம், மறுபடியும் தனி ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மிக பெரிய உழைப்பு, எப்படி இப்படி, அடுத்த பாகம் ஜாக்கிரதையாக செய்யுங்கள் என்று கூறினார் என்று பதிவிட்டுள்ளார்.

SHARE