ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் என இருவரையும் இயக்கிவிட்டார். இப்போது ரஜினி அவர்களை புதிய படம் மூலம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பது படம் வெளியான பிறகு தெரியும். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் தான் நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் எல்லா பெரிய நடிகர்களின் படங்களுக்கு நடப்பது போல் இப்படத்தின் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.
ரஜினி அதில் ஸ்டைலாக நடந்து வரும் காட்சி பதிவாகியுள்ளது.
#Darbar Shooting spot video… pic.twitter.com/UatSXtQj4x
— Rajini Soldiers (@RajiniSoldiers) May 10, 2019