முல்லைத்தீவு மேழிவனம் பகுதியில் போசாக்கற்ற நிலையில் அதிகளவான சிறுவர்கள்

209

முல்லைத்தீவு மேழிவனம் பகுதியில் குடும்ப வறுமை தொழில் வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவான சிறுவர்கள் போசாக்கற்ற நிலையில் காணப்படுவதாக கிராம மட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் மேழிவனம் கிராமத்தில் வாழ்ந்து வரும் 90 வீதமான குடும்பங்கள் தொழில் வாய்ப்பற்றநிலையில்  அன்றாடம் கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும்  வரும் வருமானத்தை கொண்டு தமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில், எந்தவித வேலை வாய்ப்புக்களும் இன்றி ஒரு நேர உணவிற்கே பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூடுதலான சிறுவர்கள் போதிய போசாக்கான உணவுகள் இன்றி போசக்கற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிதுள்ள இப்பகுதி பொது அமைப்புக்கள் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் சொல்லன்னா துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இங்குள்ள சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பொருளாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் அதிகளவான சிறுவர்கள் பாடசாலைக்கல்வியை இடைநிறுத்திவிட்டு கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர் எனவும் இது தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும். இதுவரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை என மேற்படி கிராமட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

SHARE