நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதியில் நேற்றிரவு 9.00 மணிமுதல் இன்று அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு 7.00 மணி தொடக்கம் இன்று காலை 6.00 மணிவரை அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இன்று காலை 6.00 மணிவரை வடமேல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் தளரத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரயில் போக்குவரத்து மற்றும் பஸ் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச பாடசாலைகள் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுகின்றது.
தேடுதல், மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடருமென பொலிஸ் ஊடகம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.